மோடியின் காலில் விழுந்த இளைஞர்! இளைஞரின் காலில் விழுந்த பிரதமர் மோடி! மாறி மாறி நடந்த சுவாரஸ்யம்..
தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கிய பாஜக நிர்வாகியை, பிரதமர் மோடியும் அந்த இளைஞரின் காலை தொட்டு வணங்கிய ருசிகரமான சுவாரஸ்யம் சம்வபவம் ஒன்று அரங்கேறி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அங்கு நடந்துகொண்டிருக்கிறது.
இதனால், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைகர்கள் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்காக, அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான தருணத்தில் தான், பிரதமர் மோடி ஒரு இளைஞரின் காலை தொட்டு வணங்கிய ருசிகரமான சுவாரஸ்யம் சம்வபவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
அதாவது, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அங்கு 3 கட்ட வாக்குப் பதிவு தற்போது வரை முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள 4 கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் அந்த மாநிலத்தில் அனல் பறந்துகொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் உன்னவ் பகுதியில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு, ராமர் சிலையை பரிசாக வழங்கி நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.
பிரதமர் மோடிக்கு, ராமர் சிலையை அவர் பரிசளித்த போது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு அவதேஷ் கட்டியார் வணங்கினார்.
இதனால், சற்று அதிர்ச்சியாகவே பார்த்த பிரதமர் மோடி, திடீரென்று உடனடியாக “தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம்” என்று சைகை காட்டி, அவதேஷ் கட்டியாரின் கால்களில் தொட்டு வணங்கினார்.
இந்த காட்சிகளைப் பார்த்த அங்கு கூடி நின்றவர்கள், அப்படியே பிரமித்து போனார்கள். இதனால், பிரதமர் மோடியும், உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியாரும் மாறி மாறி காலில் விழுந்து மரியாதை செலுத்திக்கொண்ட நிகழ்வு, பெரும் ருசிகரமாக அமைந்திருந்தது.
தற்போர், இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு, பெரும் வைரலாகி வருகிறது.
இதே போல், முன்னாள் பிரதமரும் பாஜாகாவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம் பில்லுச்சேரியை சேர்ந்த சின்னப்பிள்ளையின் சமுக சேவையை பாராட்டி விருது விழாவின் போது அவரது காலில் விழுந்து வணங்கிய நிகழ்வு, பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.