“பாஜகவின் வருவாய் 2019-20 ல் 50 சதவீதம் அதிகரிப்பு!”
பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த 2019-20 ஆம் நிதியண்டில், 50 சதவிகிதம் அதிகரித்து 3,623 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
மத்தியி்ல் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்துடன், மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவியேற்று கடந்த மே 30 ஆம் தேதியுடன், 7 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
அதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதிலும் பாஜகவின் அப்போதைய பிரதமர் வேட்பாளராக அறியப்பட்ட மோடியின் அலை வீசியது.
இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
அத்துடன், 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தேர்தலுக்கு முன்னதாக பேசிய பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் ஷா, “வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஜெயித்துவிட்டால், அடுத் 50 ஆண்டுகளுக்கு எங்களை யாரும் அசைத்துக்கொள்ள முடியாது” என்று, பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் அமித் ஷா, வெளிப்படையாகவே பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
இப்படியான சூழலில் தான், பாரதிய ஜனதா கட்சியின் 2018-19 ஆம் நிதியாண்டின் வருவாய் 2,410 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அடுத்து வந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 50 சதவிகிதம் அளவுக்கு ஒரே அடியாக உயர்ந்து, 3,623 கோடி ரூபாயாக தற்போது அதிகரித்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சமர்ப்பித்த தணிக்கை அறிக்கை மூலம் இந்த விபரங்கள் தற்போது தெரிய வந்திருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலமாக, 2,555 கோடி ரூபாயை பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில், பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் காங்கிரஸ் கட்சியின் வருவாயான 682 கோடி ரூபாயில் இருந்து 5.3 மடங்கு அதிகமாகும்.
அதே நேரத்தில், அந்த ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியின் மொத்த வருவாய், 6 தேசியக் கட்சிகளின் மொத்த வருவாயை விட 3 மடங்கிற்கும் மேல் அதிகமாக உள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.
அதே போல், 2019-20 ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் செலவினங்கள் 64 சதவிகிதம் அதிகரித்து, தற்போது 1,651 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதும் தெரியவந்து உள்ளது.
இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த 2019-20 ஆம் நிதியண்டில், 50 சதவிகிதம் அதிகரித்து 3,623 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது, மற்ற கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியா அளவில் வைரலகி வருகிறது.