“#IPL2022 15வது சீசனுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக” #CSK வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளது, #CSK ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
#IPL2022 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்றும் நெருங்கி வருகிறது.
இந்த #IPL2022 சீசனில் #CSK அணி, இது வரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 8 போட்டிகளில் தோல்வி கண்டு ப்ளே ஆப் கனவை இழந்து, 2 வது அணியாக வெளியேறி உள்ளது. சென்னை அணியைானது 8 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் தொடர்கிறது.
என்றாலும், #IPL2022 சீசனில் #CSK அணியானது ஜொலிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அதற்கு மிக முக்கிய காரணம், #CSK அணியில் சிறந்த பவுலர்கள் இல்லாமல் போனது மிக முக்கிய காரணமாக இருந்தது.
அத்துடன், #CSK அணியில் தொடக்க வீரர்களாக இறங்கும் பேட்ஸ்மேன்கள் சரியாக அமையாமல் போனதும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. என்றாலும், மிடில் ஆர்டரில் களம் இறங்கும் வீரர்கள் சரிவர பேட்டிங் ஆடவில்லை என்கிற ஒரு பரவலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலிலி தான், “#IPL2022 15 வது சீசன் தொடருக்கு பிறகு, கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக” அம்பத்தி ராயுடு, தற்போது அறிவித்து உள்ளார்.
அதாவது, அம்பத்தி ராயுடு, நடப்பு #IPL தொடரில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையடி வரும் வீரர்களில் தவிர்க்கவே முடியாத முக்கிய வீரராக வலம் வருகிறார்.
இவர், முதலில் #MI மும்பை அணியிலும், அதன் பிறகு #CSK சென்னை அணி என இந்த இரு அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தார்.
தற்போது, 36 வயதான அம்பத்தி ராயுடு, ஏற்கனவே “சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக” முன்பு அறிவித்திருந்தார்.
சரியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் இடம் கிடைக்காத நிலையில், அவர் இந்த ஓய்வு முடிவை அறிவித்தார் என்று, கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், அம்பத்தி ராயுடு, #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.
இப்படியான சூழலில் தான், “நடப்பு #IPL தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக” அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளது, #CSK சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தனது ஓய்வு முடிவு குறித்து ராயுடு டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், “இது எனது கடைசி #IPL என்று அறிவிப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், “கடந்த 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான தருணம் அமைந்தது. இந்த அற்புதமான பயணத்திற்காக #MI மும்பை இந்தியன்ஸ் மற்றும் #CSK அணிக்கு என் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றும், அவர் உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.
முக்கியமாக, 36 வயதான அம்பத்தி ராயுடு, “#MI மும்பை அணிக்காக 2416 ரன்களும், 14 அரைசதங்களும்” அடித்துள்ளார்.
அதே போல், “#CSK அணிக்காக, 1771 ரன்களும், 1 சதமும், 8 அரைசதமும் அடித்து” அசத்தி உள்ளார்.
குறிப்பாக, “இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள ராயுடு, 1694 ரன்களும், 6 டி 20 போட்டியிலும்” அவர் விளையாடி இருக்கிறார்.
இந்த தருணத்தில் தான், நடப்பு #IPL2022 சீசனில் கடந்த சில போட்டியில் அம்பத்தி ராயுடு தனது பழைய ஆட்டத்தை ஆடாமல் சற்று திணறி வருகிறார் என்றும், இதனால் இளம் வயதினருக்கு வழி விடும் நோக்கில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தனது ஓய்வு குறித்து முடிவை வெளியிட்ட டிவிட் செய்த ராயுடு, அதனை சிறிது நேரத்தில் நீக்கியதால் சென்னை ரசிகர்கள் சற்று குழப்பம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.