மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு! ஆந்திராவில் பரிதாபம்..
ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்து தீ விபத்து ஏற்பட்டத்தில், ஆட்டோவில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தடிமரி பகுதியில் உள்ள சிலகொண்டையா பல்லி கிராமத்தைச் சேர்ந்த சிலர், அந்த பகுதியில் மேற்கொள்ள உள்ள விவசாய வேலைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு ஆட்டோவில் இன்று காலை ஏறி உள்ளனர்.
அந்த ஆட்டோவில் மொத்தமாக 8 பேர் பயணம் செய்த நிலையில், அந்த ஆட்டோவும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சாலையில் பயணித்து உள்ளது.
அந்த ஆட்டோ, அந்த கிராமத்தை தாண்டி சிறிது தூரம் சென்று கொண்டிருந்த நிலையில், அந்த சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியானது, திடீரென்று ஆட்டோ மீது விழுந்து உள்ளது.
உயர் மின் அழுத்த கம்பியானது, ஆட்டோ மீது விழுந்த வேகத்தில், அந்த ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடனடியாக தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனால், அந்த ஆட்டோவில் இருந்த அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்து அப்படியே தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து உள்ளது.
இதனால், அந்த ஆட்டோவில் இருந்து யாராலும் இறக்க முடியாமல் தவித்து உள்ளனர்.
அதே நேரத்தில், ஆட்டோ உள்ளேயும், வெளியேயும் பற்றிய தீயானது, வேகமாக அந்த ஆட்டோ மீது முழுவதுமுாக பரவியதால், அந்த ஆட்டோவில் பயணித்த பயணிகள் அனைவரும் ஆட்டோவிற்குள்ளேயே சிக்கிக்கொண்டு தவித்து உள்ளனர்.
இதனால், அந்த ஆட்டோவில் பயணித்த 8 பேரும், அங்கேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், ஆட்டோவில் பயணித்து உயிரிழந்த அனைவரும், அங்குள்ள தாடிமரி மண்டலம் குண்டம் பள்ளியில் வசிப்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், உயிரிழந்த அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், விவசாய பணிக்காக அவர்கள் அனைவரும் ஒரே ஆட்டோவில் சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதும்” முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விபத்தால், அந்த கிராமமே தற்போது பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.