10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், இதில் 34 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திராவில் கடந்த கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.

அதன்படி, ஆந்திராவில் மொத்தம் 13 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவ - மாணவிகள் இந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்கள். 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதி அன்று, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறைப்படி அறிவிக்கப்பட்டன. 

அப்போது, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

அதாவது, இந்த 10 ஆம் வகுப்பு தேர்தல், சுமார் 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில், யாரும் எதிர்பாரத விதமாக, சுமார் 2 லட்சம் மாணவ - மாணவிகள் இந்த தேர்வில் தோல்வியை தழுவினர். 

இதனால், 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மொத்த மாணவ - மாணவிகளும் கடும் விரக்தியடைந்து காணப்பட்டனர்.

இப்படியான சூழலில் தான், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பலரும் கனடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர்களில் 34 மாணவ - மாணவிகள் அடுத்தடுத்து வரிசையாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 

இதனால், கடந்த சில நாட்களில் மட்டும் ஆந்திரா மாநிலம் முழுவதும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 34 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த மாணவர்களைப் போலவே, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ - மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆறுதல் கூறி வருனார். இதற்கு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ க்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் நாரா லோகேஷ் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், “தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை தடுத்த நிறுத்த வேண்டும்” என்று, சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதனிடையே, 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததற்காக, வரிசையாக 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், ஆந்திராவில் சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தோல்வி அடைந்த சக பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.