பார்வையை திரும்பப் பெற்ற 110 வயது முதியவர்- கேரளாவில் அதிசயம்!
கேரளாவில் மூத்த டாக்டர்கள் குழு, இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூரைச் சேர்ந்த 110 வயது முதியவர் ரவி. இவருக்கு கண்புரை காரணமாக 2 கண்களிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதியவர் ரவிக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்ய மஞ்சேரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து ஒரு மூத்த டாக்டர்கள் குழு இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தது. அதனால் கண்களை இழந்த 110 வயது முதியவர் மீண்டும் உலகை காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மேலும் 110 வயது முதியவருக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள் குழுவினரை கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கண் மருத்துவர்கள் தங்கள் கண்களில் லென்சை பொருத்திக்கொண்டு கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மருத்துவர்கள் சற்று அதிக கவனத்துடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தற்போது மருத்துவத் துறையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யும்பொழுது லேப்ராஸ்கோப்பி பயன்படுத்தி பெரிய திரையில் அதனைப் பார்த்து முப்பரிமாணத்தில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கண் அறுவை சிகிச்சையில் தற்போது வரை பழைய முறைப்படியே செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவனம் முழுவதும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்யும் புதிய இயந்திரத்தை இன்று சென்னை எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவ மையம் மற்றும் அரசு கண் மருத்துவமனையில் அறிமுகம் செய்தது.
அதனைத்தொடர்ந்து முழுவதும் இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முப்பரிமாண தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி தமிழ்நாடு மருத்துவ கழகம் மற்றும் மெட்ராஸ் சிட்டி அரசுடன் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரடியாக கண்டுகளித்தார்.
மேலும் உலகில் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாட்டில் மட்டுமே முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கண்டறிந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.