பிராண்ஸில், இளைஞர்கள் மத்தியில் வேகமாய் பரவும் கொரோனா!
By Nivetha | Galatta | Aug 24, 2020, 02:28 pm
உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இன்று (ஆகஸ்டு 24) காலை 6மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 23,582,726 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. இதுவரை அனைத்த நாடுகளிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 22/08/2020 காலை 6 மணி நிலவரப்படி, 2,35,82,726ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,12,474ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 16,080,265 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,874,146 ஆகவும், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 180,604 ஆக உயர்ந்துள்ளது. .தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,167,063 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,526,479 ஆக உள்ளது
தொற்று பாதிப்பில் 2வது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,605,783 ஆகவும், இதுவரை 114,772 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2,709,638 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 781,373 பேர்.
3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால், ஒருநாள் பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,105,185ஆக உள்ளது. இதுவரை 57,692 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,336,796 பேர் குணமடைந்து உள்ளனர். இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு
710,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4வது இடத்தில் ரஷியாவும், 5வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருவதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது தாக்குதலை ஆரம்பித்ததுள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் இங்கிலாந்தில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், ``புதிததாக மற்றவர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்குட்பட்டவர்களிடமே நான்கு மடங்கு அதிகமாக பரவி வருகிறது" என சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் எச்சரித்துள்ளார்.
மேலும் அவர், ``ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கண்டறியப்படுவது அதிக சோதனைகளால் மட்டும் இல்லை. இந்த நோய் பரவை எதிர்த்து போராடுவதற்கு மீண்டும் ஊரடங்கிற்கான அவசியத்தை நிராகரித்த இவர், கடந்த 24 மணி நேரத்தில் அதாவது சனிக்கிழமையன்று புதித்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3602-ஆக உள்ளது. இது முந்தைய நாளை விட சிறிதளவு உயர்வு என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவது அதிகரித்து வருகிறது.இதனால் அதற்கு தேவையான புதிய நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும். குறிப்பாக, சமூக இடைவெளிக்கான விதிகளை கடைபிடிக்காமல் நடத்தப்படும் கூட்டங்களால் இப்போது தொற்று நோய் பரவலுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது" என்று கூறி எச்சரித்துள்ளார்.