தாயை இழந்த காதலனின் தந்தையை திருமணம் செய்துகொண்ட காதலி!
“நான் உனக்கு அம்மா மாதிரி” என்று சொன்ன காதலி ஒருவர், தாயை இழந்த காதலனின் தந்தையை திடீரென்று திருமணம் செய்துகொண்டு, தனது காதலனுக்கு அம்மாவாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஒவ்வொரு காதலியும், தனக்கு அம்மாவாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காதலனும் ஆசைப்படுவதுண்டு. ஆனால், அதுவே சற்று இயற்கை விதிகளுக்கு முரண்பட்டு நடந்தால் எப்படி இருக்கும்?” அப்படியான இயற்கை விதிகளுக்கு முரண்பட்டு நிஜத்தில் ஒரு உண்மையான சம்பவம் அரங்கேறி இருப்பது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அதாவது, டிக்டாக் தளத்தில் @ys.amri என்ற ஐடி பெயர் கொண்ட இளம் பெண் ஒருவர் தான், இப்படி ஒரு பரபரப்பான சம்பவத்தை, தனது வாழ்வில் நிகழ்த்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அந்த பெண்ணே வெளியிட்டிருகு்கும் பதிவில், “நானும் எனது காதலனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். நிறைய ஊர் சுற்றினோம்.
“எங்களது காதல் இப்படி இன்பமயமாகவே சென்றுக்கொண்டிருந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் காதலனின் அம்மா திடீரென்று உயிரிழந்து விட்டார்.
ஆனால், அதிலிருந்து எனது காதலன் பெரும் துயரத்தில் மூழ்கி போனவராய் காணப்பட்டார். என் காதலரின் அம்மா இறந்து போனதை என் காதலனால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், அவர் யாரிடமும் எதுவும் பேசாமல், எப்போதும் சோகமாகவே காணப்பட்டார்.
இது பற்றி யோசித்த நான், துணிந்து ஒரு முடிவு எடுத்தேன். அதன் படி, என் காதலனுக்கு நானே ஒரு தாய் பாசத்தை கொடுக்க உண்மையான தாயாகவே மாற திட்டமிட்டேன். அதற்காகவே, எனது காதலனின் தந்தையை நான் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன்.” என்று, பதிவிட்டு உள்ளார்.
மேலும், அவர் கூறியுள்ள பதிவில், “எனது இந்த செயலால், எனது காதலன் இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் அவருக்கு கொடுப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றும், உணர்ச்சிக்கரமாக தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
@ys.amri என்ற அந்த இளம் பெண்ணின் இணைய பதிவானது, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டிரெண்டாகி வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சில இணையவாசிகள் அந்த பெண்ணின் முடிவை ஏற்றுக்கொண்டு, அது பெரும் தியாகம் என்றும், அது போற்றலுக்கு உரியது என்றும், ஆதரவான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இன்னும் சிலர், “இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும், காதலனுக்கு மனைவியாகி ஏன் தாய் பாசத்தை கொடுக்க முடியாதா?” என்றும், கேள்வி எழுப்பி மிக கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
எது எப்படி இரந்தாலும், இதனை சம்மந்தப்பட்ட பெண்ணின் காதலன் ஏற்றுக்கொண்டதால் தானே, காதலனின் தந்தையை அந்த பெண் திருமணம் செய்திருக்கிறார் என்ற ஒரு சொல்லாடலும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.