“காதலர் தினத்தை” மிகவும் வித்தியாசமாகவும், முழு சுதந்திரத்தோடும் கொண்டாடும் வகையில் தேசிய விடுமுறையாக அறிவித்து, ஆண்டுதோறும் இந்நாளை மிகவும் விசேசமாகக் கொண்டாடி வருகிறது டென்மார்க்.

காதல், அன்பின் உன்னத வார்த்தை. 

காதல் என்ற வார்த்தைக்கு, இந்தியாவில் மவுசு சற்று குறைவு தான். ஆனால், இதனை அங்கீகரிக்காத உலக நாடுகளே இல்லை என்று சொல்லலாம். 

அவ்வளவு சக்தி மிக்க ஒரு விசமாக இந்த காதல் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்பதே உண்மை.

“காதலர் தினம்” இந்தியாவில் சமீபத்தில் தான் பரிச்சியமானது என்பது உண்மை தான். 

அதே நேரத்தில், “காதலர் தினம்” இந்தியாவில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொண்டாடப்பட்டுக்கொண்டே தான் வருகிறது. ஆனால், இதற்கு இங்குள்ள 

உள்ளூர் அரசியல் கட்சிகள், மத சாயம் பூசி, அவற்றை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது. அது தொடர்பான அராஜக போக்கைக் கடந்த காலங்களில் இந்தியாவின் சில இடங்களில் நம்மாள் காண முடிந்தது.

ஆனால், நாகரம் வளர்ந்த வெளிநாடுகளில் எல்லாம், இந்த “காதலர் தினம்” மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த “காதலர் 
தினம்” வரும் பிப்ரவரி 14 ஆம் தேதியை முழு சுதந்திரத்தோடும் காதலர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றைய தினத்தைத் தேசிய விடுமுறை தினமாக அறிவித்திருக்கிறது டென்மார்க் அரசு.

டென்மார்க் நாட்டில், கடந்த 1990 ஆம் அண்டு முதலே காதலர் தினத்துக்குத் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நாளில், ஆண்கள் தங்களுடைய காதலிக்கு டேனிஷ் ட்விஸ்ட் என்ற ரொட்டியைத் தயாரித்து வழங்குவதும், பெயர் இல்லாது வரும் நகைச்சுவை காதல் அட்டையை அனுப்பிய ஆண் யார் என்பதைப் பெண்கள் கண்டுபிடிப்பதும் வழக்கமாக அந்நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. 

உலகில் எத்தனையோ நாடுகள் காதலை அங்கீகரித்து இருந்தாலும், கொண்டாடினாலும், அவற்றை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, காதலர் தினத்துக்குத் தேசிய விடுமுறையாக அறிவித்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையைப் பெறுகிறது டென்மார்க்.

அதே போல், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் தான், உலகின் முதல் காதல் நகரம் என்ற சிறப்பை பெற்று இன்று வரை திகழ்கிறது. இந்த நாட்டில் தான், முதலாவதாகக் காதலர் தின வாழ்த்து அட்டையும் வெளியானது நம்மில் பலரும் அறியாத ஒரு வசியமாகும்.

இப்படியாக, ஒவ்வொரு வெளி நாட்டிலும் ஒவ்வொரு விசித்திரமான சடங்கள் மேற்கொள்ளப்பட்டு, காதலர்களின் நம்பிக்கைகள் ஒவ்வொரு விதமாக உலா வருகின்றன. 

குறிப்பாக, இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட குன்னூர் சுற்றுலாப் பகுதிகள் குவிந்து வரும் காதலர்களின் கூட்டத்தால், அந்த பகுதியே களைகட்டி உள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த காதலர்கள், காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, சுற்றுலா மையங்களைத் தேர்ந்தெடுத்து அதிக அளவில் இங்கு கொண்டாடி மகிழ்ந்துமகிழ்ந்து வருகின்றனர்.

அதன் படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தளங்களான சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான காதல் ஜோடிகள், பூங்காவில் உலா வருவதும் செல்பி எடுப்பதும் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.

குறிப்பாக, உலகில் உள்ள எல்லா காதலர்களும், தங்களது காதலிக்கும், காதலனுக்கும் அன்பின் பரிசாக ஒருவருக்கொருவர் முத்தத்தை பகிர்ந்துகொண்டும் வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில் சந்திக்க வாய்ப்பே இல்லாத காதலர்கள் பலரும், செல்போனில் காதல் தீர தீர தங்களது அன்பினை பரிமாறிக்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.