ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி! உயிர் தப்பிய புதின்! 4 வது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் போர்..
ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து புதின் உயிர் தப்பி உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றுடன், ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதம் முழுவதுமாக முடிந்து, 4 வது மாதத்தில் இன்று அடியெடுத்து வைக்கிறதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதங்களை முழுமையாக தொடங்கி, இன்றுடன் 4 வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.
என்னும், ரஷ்யா ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இந்த போர் முடிவுக்கு வராமல் 4 வது மாதமாக தொடர்ந்து வருகிறது.
அதாவது, உக்ரைன் போரில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகைளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய போர் வீரர்கள் பலரும், உக்கிரமான பல்வேறு விதங்களில் கடும் கொடூரங்களை நிகழ்த்தி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வண்ணம் ஒரு பக்கம் உள்ளன.
அத்துடன், கடந்த 3 மாத கால நடந்த போரில், உக்ரைன் நகரின் பல கட்டிடங்கள், ரஷ்ய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. இந்த நகரத்தில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் இடி பாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, அங்கு கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இப்படியாக, ரஷ்ய வீர்ரகளின் பாலியல் பலாத்கார அட்டகாசங்கள் உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து உக்கிரமாகி வருவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதனால், “உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” என்று கூறி, கேன்ஸ் திரைப்பட விழாவில் இளம் பெண் ஒருவர், ஆடைகள் இல்லாமல் கடந்த வாரம் நிர்வாணப் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்ததாகவும், அதில் புதின் உயிர் தப்பி உள்ளதாகவும்” உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு தலைவர் புதிய தகவலை தெரிவித்து உள்ளார்.
அத்துடன், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும்” உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
மேலும், “புதின் வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற, சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும்” தகவல் வெளியான நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ்வும், இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஐரோப்பா, ஆசியாவுக்கு இடையே உள்ள கருங் கடலுக்கும் - ரஷியாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்னும் இடத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்தது” என்று, அவர் கூறியுள்ளார்.
முக்கியமாக, “உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய பிறகு, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று இந்த கொலை முயற்சி நடந்தது என்றும், ஆனால் அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது என்றும், என்றாலும் புதின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்” என்றும், அவர் கூறியுள்ளார். இந்த செய்தி, உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.