“ரஷ்ய படைகள் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை” உக்ரைன் சுமத்தி உள்ளது, உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியா - உக்ரைன் போர் இன்றுடன் 49 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்களும் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், உக்ரைன் வீதிகளில் பல 100 க்கணக்கான அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை தற்காலிக நீக்கம் செய்து, ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் தான், “ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” உக்ரைன் அதிர்ச்சி தரும் அறிவிபபை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன் படி, “உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களிலும் ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தி வருவதாகவும், உக்ரைனின் புச்சா நகரில் மட்டும் குறைந்தது 400 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டு உள்ளனர்” என்றும், குற்றம்சாட்டி உள்ளது.

“ரஷ்யப் படைகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனின் 2 வது பெரிய நகரமான கார்கிவில் நடந்த படுகொலைகள் குறித்தும் உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்தி வருவதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனின் வழக்கறிஞர் குழு அலுவலகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அந்த அறிக்கையில், “ரஷ்யப் படைகளால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான போர்க் குற்றங்கள் நடந்து உள்ளன என்றும். பொது மக்களை படுகொலை செய்தல், பெண்கள் பலாத்காரம், குழந்தைகளை கொல்லுதல் போன்ற சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன” என்றும், கடுமையாக விமர்சித்து உள்ளது. 

“கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை 186 குழந்தைகள் கொல்லப்பட்டது உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆக மொத்தமாக 6,036 போர்க் குற்றங்கரளை ரஷ்யா இதுவரை நிகழ்த்தி உள்ளதாகவும்”  உக்ரைனின் வழக்கறிஞர் குழு அலுவலகம் அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டை தற்போது உலக நாடுளுக்கு அறிக்கையாக வெளிப்படையாகவே வெளியிட்டு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், கடந்த 11 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று, “உக்ரைன் அசோவ் பகுதியில் உள்ள படைப் பிரிவு மீது நடந்த தாக்குதலில், 3 ராணுவ வீரர்கள் விஷத்தன்மை கொண்ட பொருளால் தாக்கப்பட்டு படு காயமடைந்து உயிருக்கு பேராடி வருவதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

“ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில், ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை என்றும், ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அது இந்த போரை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்” என்று மேற்கத்திய நாடுகள் மிக கடுமையாகவே எச்சரித்து உள்ளது.

குறிப்பாக, “உக்ரைன் மரியோபோல் நகரில் ரஷ்யப் படையினர், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராயப்படும்” என்று, அமெரிக்காவும், இங்கிலாந்தும் தற்போது அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.