“#OhMyGOD” வெளிநாட்டு ரிப்போர்ட்டர்களிடம் பதில் அளிக்க முடியாமல் திணறிய பிரதமர் மோடி!
டென்மார்க் -கில் பத்திரிகையாளர்களை கண்டதும் “Oh My GOD!” என்று சொன்னபடியே, பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து சென்ற சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அதன் படி, பிரதமர் மோடி, முதலாவதாக ஜெர்மனி சென்றார். அதன்படி, அந்நாட்டின் தலைநகர் பெர்லின் நகருக்கு நேற்று முன் தினம் அதிகாலை சென்று சேர்ந்தார்.
அங்கு, அந்நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன் பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.
அப்போது, கார்பா மற்றும் பிற இந்திய பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் தங்கள் மகிழ்ச்சியை பிரதமர் மோடியின் முன்பு அவர்கள் வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி நேற்றைய தினம் டென்மார்க் சென்றார். அங்கு, பிரதமர் மோடி, நார்வே, ஃபின்லாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களை சந்தித்து உரையாடினார் என்று கூறப்படுகிறது.
இப்படியா சூழலில் தான், டென்மார்க்கில் பிரதமர் மோடி வரும் வழியில் அந்நாட்டின் செய்தியாளர்கள் காத்திருந்தனர். இதனை எதிர்பார்க்காமல் அந்த வழியாக பிரதமர் மோடி வந்ததும், அந்நாட்டு செய்தியாளர்கள் மோடியை சூழ்ந்துகொண்டு, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, செய்தியாளர்களை பிரதமர் மோடி பார்த்ததும், “Oh My God” என்று, கூறினார்.
அத்துடன், மோடியைப் பார்த்து செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனால், அதில் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் பிரதமர் மோடி, அங்கிருந்து சென்று உள்ளார். இது தொடர்பான வீடியோ, தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, இந்திய அளவில் “#Oh My God" என்ற ஹேஷ்டாக்கும், பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
குறிப்பாக, “நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்றது முதல், பத்திரிகையாளர்களை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருவதாக” ஏற்கனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், “பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமென்று” பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுத்திக்கொண்டு வருகின்றனர்.
இப்படியான சூழுலில் தான், இது எதைப் பற்றியும் துளியும் கவலைப்பாடமல் பிரதமர் மோடி, தற்போது பத்திரிகையாளர்களை பார்த்து “#Oh My God" என்று, சொல்லியிருப்பது, இந்தியாவையும் தாண்டி இணையத்தில் பெரும் வைரலாகி வருவதுடன், தற்போது இந்திய அரசியலில் இது பேசும் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.