அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அறிவிக்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைப்பெற்றது. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஜோ பைடனுக்கு எதிராக குரல்கள் எழுப்பி கலவரத்தில் ஈடுப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினருடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சூழல் கை மீறி போனதை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கி சூடு செய்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானர். இதனால் அமெரிக்காவில் அசாதாரண சூழல் ஏற்பட்டு உள்ளது. 


இந்நிலையில், அமெரிக்க கலவரம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாஷிங்டனில் நடைபெற்ற வன்முறை செய்திகள் வேதனை கொடுக்கிறது. ஒரு அதிகார மாற்றம் அமைதியான வழியில் தான் நடக்க வேண்டும். சட்டவிரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.