கடந்த 2020ம் ஆண்டில் நிலவிய வெப்பம், மழைப்பொழிவு, குளிர் குறித்த அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. 2020 வெப்பநிலையை பொருத்தமட்டில் அந்த ஆண்டின் சராசரி புவி மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 0.29 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்து உள்ளது.
இது 1901-ம் ஆண்டிற்கு பிறகு பதிவான எட்டாவது மிகவும் வெப்பமான ஆண்டு 2020 என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் மட்டும் 1,444 பேர் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் மற்றும் ஜூன் மாதத்தை தவிர மற்ற மாதங்களை விட இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகி உள்ளது.
மழைப்பொழிவை பொருத்தமட்டில் தென்மேற்கு பருவமழையில் 109 சதவிகிதமும் வட கிழக்குப் பருவமழையில் 101% மழையை பெற்று கடந்த ஆண்டில் இயல்பை ஒட்டிய மழைப்பொழிவு இந்தியா முழுவதும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.