1 ஜி.பி டேட்டா 2,050.69 ரூபாய்! - இணையம் பயன்படுத்துவதில் ஆண்கள் முதலிடம்!
By Madhalai Aron | Galatta | Jul 07, 2020, 02:03 pm
உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவில், தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்றாற்போல் தொழில்நுட்பங்கள் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
அதற்கேற்றது போல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா முன்னேறி வருகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக சலுகைகள் கிடைப்பது இந்தியாவில்தான். இதில் பல்வேறு போட்டிகளுடன் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் களமிறங்கியன. இதற்கேற்றாற்போல் டேட்டாவின் கட்டணமும் போட்டாப்போட்டியக குறைக்கப்பட்டன. இந்தியாவின் மக்கள் தொகையில் 40.9 சதவிகிதம் அதாவது சுமார் 56 கோடி பேர் தொடர்ச்சியாக இணையம் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய லாக்டவுன் காலத்தில், செல்போன் மற்றும் இணையப்பயன்பாடு அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கேற்றாற்போல், பல்வேறு சலுகைகளும், இணையக் கட்டணமும் குறைந்து கொண்டே வருவதுதான்.
அதாவது, கடந்த 2019-ல் இந்தியாவில் 1 ஜி.பி டேட்டாவானது வெறும் 18 ரூபாயில் கிடைத்தது. உலகிலேயே குறைந்த கட்டணத்தில் 1 ஜி.பி டேட்டா கிடைத்தது இந்தியாவில் மட்டுமே. ஆனால் தற்போது 2020-ல் டேட்டவின் கட்டணம் 6.74 ரூபாயாகக் குறைந்துள்ளது.
2020-ல் குறைவான விலையில் டேட்டா பயன்படுத்தும் முதல் 5 நாடுகள்!
இந்தியா : 6.74 ரூபாய்
இஸ்ரேல் : 8.24 ரூபாய்
கிர்கிஸ்தான் (Kyrgyzstan) :15.71 ரூபாய்
இத்தாலி : 32.18 ரூபாய்
உக்ரைன் (Ukraine) :34.42 ரூபாய்
அதிக விலையில் டேட்டா பயன்படுத்தும் கடைசி 5 நாடுகள்! (2020)
போட்ஸ்வானா (Botswana) : 1,037.69 ரூபாய்
ஏமன் (Yemen) : 1,195.55 ரூபாய்
சாட் (Chad) : 1,745.45 ரூபாய்
பெனின் (Benin) : 2,036.48 ரூபாய்
மலாவி (Malawi) : 2,050.69 ரூபாய்
உலகம் முழுவதும் 457 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பது சீனா. அதாவது சுமார் 85.4 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். சீனாவை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 56 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது இடத்தில் 31.3 கோடி பயனர்களுடன் அமெரிக்கா உள்ளது.
2020-ல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள்! (டாப் 5 நாடுகள்)
சீனா : 85.4 கோடி
இந்தியா : 56 கோடி
அமெரிக்கா : 31.3 கோடி
இந்தோனேசியா : 17.1 கோடி
பிரேசில் : 14.9 கோடி
கொரோனா காரணத்தினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக செல்போன் மற்றும் இணையதளப் பயன்பாடு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நகர்ப்பகுதிகளை விடக் கிராமப்பகுதிகளில் இணையதளப் பயன்பாடு அதிகமாக உள்ளது.
லாக்டவுன் காலத்தில் இணையதள பயன்பாடு!
இந்தியா : 40%
கிராமப்புறம் : 54%
நகர்ப்புறம் : 32%
அதேபோல் இந்தியாவில், இணையம் அதிகம் பயன்படுத்துவதில் ஆண்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இந்தியாவில் இணையம் அதிகம் பயன்படுத்துபவர்கள்!
ஆண் : 65%
பெண் : 35%
ஒவ்வொரு நாளுக் சராசரியாக ஆன்லைனில் வீடியோ பார்க்கும் அளவும் கொரோனா பரவுவதற்கும் முன்பும், அதன்பின் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணத்தினாலும், தினமும் வீடியோ பார்க்கும் நேரம் அதிகரித்துள்ளது.
2020 - ல் சராசரியாகத் தினமும் வீடியோ பார்க்கும் நேரம்!
ஜனவரி - பிப்ரவரி : 3 மணி நேரம் 22 நிமிடம்
ஏப்ரல் - மே : 3 மணி நேரம் 54 நிமிடம்
அப்படி இணையத்தில் என்ன செய்வார்கள் என்பதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில், 18 சதவிகிதம் பேர் மெசேஞ் அனுப்பவும், 15 சதவிகிதம் பேர் வீடியோக்கள் பார்க்கவும், சமூக வலைத்தளங்களை 15 சதவிகிதம் பேரும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், 11 சதவிகிதம் பேர் இணையத்தில் கேம்ஸ் விளையாடுவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
வளர்ந்து வரும் செல்போன் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இந்தியாவின் இணையப் பயன்பாட்டின் செயல்பாடும் மாறிவருகின்றன. அதற்கேற்றாற்போல், பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன.