வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கி சூடு சம்பவம்! - பரபரப்புக்கு மத்தியில் ட்ரம்ப்
By Madhalai Aron | Galatta | Aug 11, 2020, 05:03 pm
அதிபர் டொனால்டு டிரம்ப் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை) அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
செய்தியாளர் சந்திப்பின் பாதியில் திடீரென அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் ஓடிச் சென்று, அவரை சுற்றி சூழ்ந்து கொண்டு, திடீரென உள்ளே அழைத்துச்சென்ற காட்சி, வீடியோவாக சமூகதளத்தில் பரவி வருகிறது. சம்பவம் நடக்கும்போது,. அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முதலில் புரியவில்லை. ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகு மறுபடியும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அதிபர் டொ
வெளியேறிய பிறகு மீண்டும் திரும்பிய ட்ரம்ப், ‘வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு, இப்போது சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததில், ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சட்ட அமலாக்கத்துறையினர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுடப்பட்ட தனிநபர் ஆயுதங்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில், ``துப்பாக்கி சூடு நடத்தியவர் யார் அவரது நோக்கம் என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு கிடைத்த தகவல் படி ஆயுதங்களுடன் அந்த நபர் வந்துள்ளார். ஒருவேளை அவர் என்னை குறிவைத்து தாக்கும் நோக்கத்துடன் வந்திருக்காமல் இருக்கலாம். ஏனெனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக நான் கருதவில்லை
டொனால்ட் ட்ரம்ப் மேலும் இதுபற்றி கூறுகையில், இந்த உலகம் எப்போதுமே ஆபத்தான பகுதிதான். எனவே இது போன்ற துப்பாக்கிச்சூடு புதிது கிடையாது. நமது சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். நான் பாதுகாப்பாக உணருகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்" என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை பூட்டப்பட்டது. ரகசிய போலீஸார் ட்ரம்பை ஓவல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளார் என்றும், இருப்பினும் உஷாரான பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர் என்றும் கூறிவருகின்றனர். தற்போது காயங்களுடன் அந்நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பென்சில்வேனியா அவென்யூவின் 17வது தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. வெள்ளைமாளிகையிலிருந்து இது கொஞ்ச தூரத்தில்தான் உள்ளது.
ஆயுதத்துடன் வந்த நபரின் நோக்கம் என்ன என்பதை சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்துக்குரிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது உடல்நிலை குறித்த உடனடி தகவல்கள் இல்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து செய்தியாளர்கள் இந்தச் சம்பவத்தினால் நடுங்கி விட்டீர்களா என்று கேட்டனர், இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், “எனக்குத் தெரியவில்லை. என்னைப் பார்த்தால் பயந்தது போலவா தெரிகிறது?” என்று கேட்டிருக்கிறார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே பதட்டம் இல்லை என்ற போதிலும் சில தெருக்கள் சீல் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இது பற்றி சம்பவ இடத்தில் அருகே இருந்த ஒரு நபர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ``என்னால் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்க முடிந்தது. அதன் பிறகு ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அது ஒரு ஆணின் குரல் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சுமார் 8 முதல் 10 பாதுகாவலர்கள் அந்த நபரை நோக்கி ஓடியதை பார்த்தேன்" என்று தெரிவித்துள்ளார்.