5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அற்புதம்! அதிசயம்..
18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வான, 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் அற்புத நிகழ்வு ஒன்று தற்போது விண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
வானில் அவ்வப்போது சில அதிசய நிகழ்வுகள் காணப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றுாலும், சில அதிசயங்களை காணும் போது, நாம் பிரமித்து நிற்பதும் நடப்பதுண்டு.
அந்த வரிசையில் தற்போது, 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வானது தற்போது வானில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன்படி, விண்ணில் ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள் அணி வகுத்து நிற்கும் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அதன்படி, சூரியக்குடும்பத்தில் அமைந்து உள்ள 8 கோள்களும், தங்களுக்கு உரிய வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
முக்கியமாக, நாம் வாழக்கூடிய இந்த பூமியில், சூரியனை ஒரு முறை முழுவதுமாக சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகிறது.
அதே போல் தான், பிற கோள்களும் இந்த சூரியனை முழுவதுமாக சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவும் மாறுபடுகிறது.
அப்படி, வாணில் உள்ள கோள்கள் சூரியனை சுற்றி வரும் போது, சில நேரங்களில் ஒரே நேர்க்கோட்டில் வரும் அதிசயமும் வானில் நிகழ்ந்து விடுகிறது.
அந்த வகையில் தான், தற்போது விணில் உள்ள கோள்களான “புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணி வகுக்கும் அதிசய நிகழ்வான தற்சமயம் வாணியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்த அற்புத நிகழ்வானது தற்போது முதல் வரும் 27 ஆம் தேதி வரையில் வாணில் காண முடியும் என்றும், விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
குறிப்பாக, “தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், அதன் பின்பாகவும் சூரியனுக்கு மேலே வளைவாக அணி வகுத்து இருக்கும் இந்த 5 கோள்களையும் வெறும் கண்களில் நாம் காணலாம்” என்றும், நாசா விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்து உள்ளனர்.
முக்கியமாக, “கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் இப்படியான ஒரு அதிசய நிகழ்வு தோன்றும்” என்றும், விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
அந்த வகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இது போன்ற நிகழ்வு வானில் தோன்றிய இந்த அற்புத நிகழ்வானது, தற்போது நிகழ்ந்துகொண்டிருப்பதால், இப்படியான இதே அதிசய நிகழ்வானது இனி, வரும் 2040 ஆம் ஆண்டு தான் தோன்றும்” என்றும், தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அதே போல், “கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகத்தில் வானியற்பியலில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நிகழ்வை கண்டுகளித்து வருவதாகவும், இன்னும் 4 நாட்கள் இதனை காண ஆய்வகத்திற்கு சுற்றுலா பயணிகள் வரலாம்” என்றும், அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.