“ரஷ்ய படைகள் மொத்தமாக அழிய போகிறதா?” உக்ரைன் சொன்னது என்ன?
“செர்னோபி அணு உலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்” என்று, ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளதால், “உக்ரைன் புதிய திட்டத்தோடு சதி செய்ய உள்ளதாக?” என்று, ரஷ்யாவை சற்று பீதி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ரஷியா - உக்ரைன் போர் இன்று 35 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், ரஷ்யா தனது ஒட்டு மொத்த பலத்தை திரட்டி, உக்ரைன் மீது தொடர்ச்சியாக மிக கடுமையாக தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால், “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்” என்று, புடினை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
அத்துடன், “உக்ரைனில் மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை ரஷ்யா வீசி வருவதாக” பீதியை கிளப்பும் புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.
இப்படியாக, உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரானது, கடந்த ஒரு மாதத்தை கடந்த நீடித்து வரும் நிலையில், “ரஷ்யாவிற்கு செல்வதை தங்கள் நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும்” என்றும், அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதே நேரத்தில், “உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தி உள்ளதாக” ஐ.நா.வில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், “ரஷ்யா, தங்களது படைகளை குறைப்பதாக கூறினாலும், தாக்குதல் மட்டும் விடாமல் தொடர்வதாக” உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
அத்துடன், “ரஷ்ய அதிபர் புதின் படைகளை திரும்பப் பெறுவது பற்றி கூறினாலும், உக்ரைனை குறிவைத்து ஏவுகணைகள் தாக்கி வருவதாகவும்” உக்ரைன் அதிபர் வேதனை தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, இன்றைய தினம் உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலைவ்லில் உள்ள அரசு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்ய படைககள் ஏவுகணைகளை வீசி மிக பெரம் தாக்குதலை நடத்தி உள்ளன.
சுமார் 9 மாடி கொண்ட அந்த கட்டிடம் ஏவுகணை தாக்குதலில் இடிந்து விழுந்தது. அதில், 12 பேர் பலியானார்கள் என்றும், 33 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும், கூறப்படுகிறது.
அத்துடன், உக்ரைனின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடந்து வருகிறது என்றும், அங்குள்ள கார்கிவ், மரியுபோல் உள்பட பல நகரங்கள் ரஷ்ய படைகள் தங்களது தாக்குதலை தொடர்ந்து வருகிறது என்றும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தான், “உக்ரைன் நாட்டில் இருக்கும் செர்னோபில் நகரில் உள்ள அணு உலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம் என்றும், இதனால் அந்நகரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை” விடுத்து உள்ளது.
அதாவது, உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் இன்றுடன் 35 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. என்றாலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சிக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், உக்ரைனின் செர்னோபில் நகரை ரஷ்ய ராணுவம் அண்மையில் கைப்பற்றியிருக்கும் நிலையில், அந்த நகரில்தான் ரஷ்ய ராணுவம் அளவுக்கு அதிகமாக குவிப்பட்டு, கீவ் நகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
அந்த நகரில்தான் 1986 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விபத்துக்கு உள்ளான அணு உலை அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், இது குறித்து உக்ரைன் பிரதமர் இரினா வெரெஷ்சுக் வெளியிட்டு இருக்கும் டிவிட்டர் பதிவில், “செர்னோபில் அணு உலைக்கு மிக அருகில் ரஷ்யா ஆயுதங்களை வைத்திருக்கிறது என்றும், ஒரு வேளை இது போரின் போது அந்த ஆயுதங்கள் வெடிக்க நேரிட்டால், அணு உலையில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்படும் என்றும், இந்த அணு உலை செயல்படா விட்டாலும் அதற்குள் ஏராளமான வேதிப் பொருட்கள் இருப்பதால், அங்கு நிகழும் சிறு அலட்சியம் கூட அங்கே மிகப் பெரிய பேரழிவுக்கு வழி வகுத்துவிடும்” என்று, மிக விளக்கமாகவே எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
“இதனால், அந்த நகரில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றும், அவர் தனது எச்சரிக்கையில் கூறியுள்ளார்.
அப்படி, செர்னோபி அணு உலை வெடிக்கும் பட்சத்தில், ரஷ்ய படைகள் மொத்தமாக அழிந்து போகும் சூழல் உருவாகி உள்ளதால், உக்ரைனில் முகாமிட்டுள்ள ஒட்டுமொத்த ரஷ்ய வீரர்களும் உயிர் பயத்தில் உரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.