தலிபான்களுடன் கைகோர்க்கும் சீனா.. இந்தியாவிற்கு பேராபத்து காத்திருக்கிறது!
“தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” என்று, சீனா கூறியிருப்பது, இந்தியாவிற்கு பேராபத்து காத்திருப்பதை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.
இந்தியாவுடன் சீனா, தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதை அண்மை காலமாக பார்க்க முடிகிறது.
இதனால், இந்தியா எல்லையில் சீனா, தொடர்ந்து தனது ராணுவ வீரர்களைக் குவித்து வருவதும், அவ்வப்போது பின் வாங்குவதுமான சூழல் தொடர்ந்து நிலவி
வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு இந்தியா - சீனா இடையே திடீரென்று போர் மூளும்
அபாயமும் ஏற்பட்டது. இதனால், இந்தியா - சீன எல்லையில் போர் மேகங்கள்
சூழ்ந்துகொண்டன. இதனையடுத்து, சீனா சற்று பின் வாங்கினாலும், அப்போது
இந்தியாவை சுற்றி வலைக்கும் வேலைகளையும் தொடர்ந்து செய்து வருவதாக
அப்போதே அச்சுறுத்தும் செய்திகள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.
இவற்றுடன், தமிழகத்தின் மிக அருகில் இலங்கை கடல் பகுதியில் சீனா, தனது துறைமுகத்தைப் புதிதாகக் கட்டமைத்து வருகிறது. இலங்கையைத் தன்வசப்படுத்தி
சீனா, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
மேலும், “ராஜபக்சே அதிகாரியின் தமிழ்நாடு ஆய்வு நடத்தியது தொடர்பாக, இந்தியாவை இலங்கை மூலம் உளவு பார்க்கிறதா சீனா? என்கிற கேள்வியும் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம்
கண்டுகொள்ளாத பல உலக நாடுகள், தற்போது தலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வதில் மிகந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்னரே பாகிஸ்தான் முழு தார்மீக ஆதரவையும் வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியானது.
அத்துடன், “இத்தனை நாட்களாக தலிபான்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்த சீனா, நேற்றைய தினம் நேரடியாகவே தனது ஆதரவை அறிவிக்கும் விதமாக”
கூறியிருந்தது.
“தலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் சீனா செயல்படும்” என்று, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெளிவுப்படுத்தியது.
இப்படியாக, தலிபான்களை சீனா ஆதரிப்பதால் தங்களது கனவுத் திட்டங்களுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், இந்தியாவுக்குக் குடைச்சல்
கொடுக்கலாம் என்றும், சீனா தற்போது புதிதாக திட்டம் போட்டு வருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ரஷ்யாவும் தலிபான்களுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இப்படியாக, வல்லரசுகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டதன் மூலம், உலக அரங்கில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிறுபித்து வருகின்றனர் தலிபான்கள்.
இப்படியான சூழ்நிலையில் தான், “பல உலக நாடுகளும் தலிபான்களை ஆதரிக்க தொடங்கிய பிறகு, வேறு வழியே இல்லாமல், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
தலிபான்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு நிச்சயம் ஏற்படும்” என்றும், அரசியர் நோக்கர்கள் விமர்சித்து உள்ளனர்.
இதனால், இந்தியாவிற்கு பெரிய அளவில் அச்சுறுத்தல்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து அண்டை நாடுகளுடன் சீனா, தனது நட்புறவை வளர்த்து வருகிறது. அந்த நட்பு நாடுகளில் தனது ஆதிக்கத்தை
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கையைானது, இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எம்.பி கார்த்தி சிதம்பரம், “அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மக்களை தலிபான் தீவிரவாதிகளுக்கு பலிகடாவாக விட்டுச்
சென்றுள்ளது என்றும், இது இந்தியாவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இந்தியாவில் உள்ள பல பயங்கரவாத
அமைப்புகளுக்கும் இடையே கண்டிப்பாக தொடர்பு ஏற்படும்” என்றும், மிக கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.