“எனக்கு ஒரு அம்மா வேண்டும், அல்லது அப்பா வேண்டும்” என கேட்ட 9 வயது சிறுவன்! தத்தெடுக்க ஒரே நேரத்தில் 5000 பேர் விண்ணப்பம்
By Aruvi | Galatta | Aug 18, 2020, 02:39 pm
“எனக்கு ஒரு அம்மா வேண்டும், அல்லது அப்பா வேண்டும்” என்று ஒரு 9 வயது சிறுவன் ஒருவன் டி.வி. நிகழ்ச்சியில் கேட்ட நிலையில், அந்த சிறுவனை தத்தெடுக்க ஒரே நேரத்தில் சுமார் 5000 பேர் விண்ணப்பித்துள்ள சம்பவம், மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதைக் காட்டி உள்ளது.
“இந்த உலகத்தில் காசு இருந்தால் எல்லாவற்றை வாங்கி விட முடியும். ஆனால், எவ்வளவு விலை கொடுத்தாலும் அம்மாவை மட்டும் வாங்கி விட முடியாது” என்ற தத்துவ வரிகளை, இவ்வுலகத்தில் இன்று வரை யாராலும் பொய்மையாக்க முடியவில்லை.
“இவ்வுலகில் அனாதையாக்கப்பட்ட பலருக்கும் கிடைக்காத ஒரு வாரமாக இருக்கிறது வாழும் கடவுளான அம்மாவின் அன்பு மட்டும். அம்மா - அப்பா இல்லாதவர்களுக்கு, அந்த அன்பு சாகும் வரை பெரும் ஏக்கமாக இருந்து விடும் இவ்வுலகில், இருப்பவர்களுக்கு அம்மாவின் அன்பு புரிவதில்லை என்ற ஓமையும் இன்றைய நிகழ்காலத்தில் எழுதப்பட்டுள்ள தத்துவங்களாகவே திகழ்கின்றன.”
இப்படி, அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா நகரில் அம்மா - அப்பா இல்லாமல், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த வந்துள்ளார் 9 வயது சிறுவன் ஜோர்டன் மற்றும் அவரது தம்பி பிரைசனும். தாய் - தந்தை இல்லாத அவர்களுக்கு அங்குள்ள ஆதரவற்றோர் இல்லம் தான் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்தது.
இதனால், அம்மா - அப்பா இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்த அவர்கள், அங்குள்ள மற்ற குழந்தையோடு சேர்ந்தே வளர்ந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், 9 வயது சிறுவன் ஜோர்டனின் தம்பியான பிரைசனை, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளது. இதனால், அந்த ஆதரவற்ற இல்லத்தில் அதிகம் தனியாக இருந்த அந்த சிறுவன் ஜோர்டன், தனிமையை உணர்ந்துள்ளார். இதனால், ஆசிரமத்தில் முன்பு இருந்த மகிழ்ச்சி கூட அந்த சிறுவனுக்கு, அங்குக் கிடைக்காமல் இருந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்காவில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஒன்று, அந்த சிறுவனிடம் எதார்த்தமாகப் பேட்டி எடுத்தது.
அப்போது அந்த சிறுவனிடம் 3 கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்குச் சிறுவன் அளித்த பதில் தான், இன்று உலகையே திரும்பிப் பார்க்கச் செய்ததுடன், அந்த 9 வயது சிறுவனை தத்தெடுக்க ஒரே நேரத்தில் சுமார் 5000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அந்த கேள்வி என்ன வென்றால், “3 வரங்கள் தந்தால், நீ என்ன வரம் வேண்டும் என்று கேட்பாய்? என சிறுவன் ஜோர்டனிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்குச் சற்றும் யோசிக்காத அந்த சிறுவன் கூறிய பதில், “குடும்பம் குடும்பம் குடும்பம்” என்பது தான். இதனைக் கேட்ட நேயர்கள் அப்படியே உரைந்துபோனார்கள்.
இதனையடுத்து, 2 வது வரம் பற்றி கேட்ட போது, “எனக்கு பெற்றோர் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அம்மா வேண்டும் அல்லது ஒரு அப்பா வேண்டும். அம்மா - அப்பா இருந்தால், எப்போதும் பேசிக் கொண்டிருக்கலாம். தனிமையை உணராமல் இருக்கலாம்” என்று கூறி உள்ளான். இதனைப் பார்த்த நேயர்கள் என்ன சொல்வது என்றே தெரியாமல், சிறுவனை வச்ச கண் வாங்காமல் பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, 3 வது ஆசை பற்றிக் கேட்டபோது, “குழந்தைகளைத் தத்து கொடுக்கும் நிகழ்ச்சியை நான் நேரில் பார்க்க வேண்டும்” என்று, அவர் கூறிய பதிலைப் பார்த்த பலரும் அழுதே விட்டார்கள்.
அந்த 9 வயது சிறுவன் ஜோர்டனின் பேச்சானது, தாய் அன்பு கிடைக்காதவர்களின் ஏக்கமும் முழுக்க தெரிந்தது. அத்துடன், ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளின் விரக்தியும், தனிமையும் அதில் இருந்ததை அனைவரும் கவனித்தார்கள். இதனால், பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அத்துடன், சிறுவன் ஜோர்டன் பேசிய இந்த வீடியோ வெளியான அடுத்த 12 மணி நேரத்தில், அமெரிக்காவில் சுமார் 5000 பேர், அந்த 9 வயது அவனைத் தத்தெடுக்க முன்வந்து, அந்த ஆசிரமத்தில் விண்ணப்பித்தனர்.
இதன் மூலம் சிறுவனுக்கு, தற்போது புதிய தாய் தந்தை கிடைக்க உள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்கா மக்களிடையே மனிதம் இன்னும் குறைய வில்லை
என்றும். தாய் அன்பு இன்னமும் அப்படியே இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.