விளையாட்டுப் போட்டி பிரிவில் யோகாசனம்!
By Abinaya | Galatta | Dec 18, 2020, 11:32 am
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி மற்றும் தியானம் முறை இன்று பல நாடுகளில் பரவி இருக்கிறது. இந்தியாவின் பரம்பரியம் மிக்க கலைகளில் யோகாசனமும் ஒன்றாக கருதப்படுகிறது.
மோடி அரசு தலைமை ஏற்றத்தில் இருந்தே யோகா தினம் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு யோகாசனத்தை விளையாட்டுப் போட்டிகள் பிரிவில் சேர்த்து, யோகாசனம் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளில் யோகா சேர்க்கப்பட்டுள்ளதால் உலக மக்களிடையே யோகாக்கலை மேலும் பிரபலமடையும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படும் யோகாக்கலை போட்டிகளுக்கு அகில இந்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் இதனால் பிற தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் போலவே யோகாக்கலை பயின்றவர்களும் இனிமேல் பெற முடியும்.
மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் மத்திய விளையாட்டு, இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ‘’ பாரம்பரிய யோகாசனம், ஒற்றையர் கலை யோகாசனம், இரட்டையர் கலை யோகாசனம், தாள யோகாசனம், குழு யோகாசனம் மற்றும் சாம்பியன் ஷிப் யோகாசனம் ஆகிய பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ” என்று தெரிவித்து இருக்கிறார்.