Workaholic-அ நீங்கள்? இதை மிஸ் பண்ணாம படிங்க..

Workaholic-அ நீங்கள்? இதை மிஸ் பண்ணாம படிங்க.. - Daily news

எந்நேரமும் வேலை வேலை என்று அலுவலகமே கதி என்று இருக்கும் நபரா நீங்கள்? International Journal of Environmental Research and Public Health என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் வேலை பளுவை அதிகம் எடுத்துக்கொள்ளாத, கூலாக வேலை செய்பவர்களை விட வேலைக்கு அடிமையாகி இருக்கும் பணியாளர்களுக்குத்தான் தூக்கமின்மை, மனச்சோர்வு, எதிர்மறையான எண்ணங்கள், பதட்டம் போன்றவை அதிகமாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 


இந்த ஒர்க்கஹாலிக் நபர்கள், மற்ற பணியாளர்களோடு ஒப்பிடும்போது வார விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஒர்க்கஹாலிக்காக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. 


இவர்களது வேலையில் அதிக டிமாண்ட், டார்கெட்ஸ், கண்ட்ரோல் இருக்கும் போது இந்த வேலை அடிக்க்ஷன் அதிகரிக்கிறது எனவும் மேலும் வேறு பெர்சனல் பிரச்சனைகளில் தீர்வு காண முடியாமல் தற்காலிகமாக இதிலிருந்து தப்பிக்க அலுவலக வேலையை அதிகம் நேரம் செய்து அடிக்க்ஷன் ஆகுகிறார்கள். மொபைல் அடிக்க்ஷன்,  கேம் அடிக்க்ஷன் போல் தான் இதுவும். இந்த அடிக்க்ஷனிலிருந்து மீள்வது அவசியம்.


இந்த அடிக்க்ஷனால் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து அந்நியம் உருவாகி, மன அழுத்தம், டென்சன், பசியின்மை, இரத்த அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவற்றால் அதிகளவு பாதிப்படைய நேரும் என்று எச்சரித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். 
 

Leave a Comment