இனி 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும்!
By Aruvi | Galatta | 03:49 PM
இனி 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நேற்று ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,
இனி வரக்கூடிய எதிர்காலத்தில் 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
அதேபோல், 15 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு, கவலைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானதாகவும், இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், எதிர்கால இந்தியாவில், இந்நோய் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
முக்கியமாக, இந்தியாவில் பெரும்பாலானோருக்குப் புகையிலை பழக்கம் இருப்பதாகவும், இதன் காரணமாகவே புற்றுநோய் ஏற்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், ஆண்களுக்கு பெரும்பாலும் வாய் பகுதியிலும், பெண்களுக்குக் கழுத்துப் பகுதியிலும், அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுவதாக மேற்கொள் காட்டி உள்ளது. இந்தியாவில், இந்த வகையான புற்றுநோய் தான், சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிகமாகத் தாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் உள்ள பணக்காரர்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகமானோருக்கு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு, அதிக உடல் உடை மற்றும் குறைந்த உடல் உழைப்பு கொண்ட வாழ்க்கை முறையாலேயே, இந்த வகையான புற்றுநோய் ஏற்படுவதாகவும், உலக சுகாதார அமைப்பு அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.