புலியை கோபப்படுத்தும் விதமாக சீண்டிய 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் 'நந்தன்வன்' விலங்கியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சிலர் வனப்பகுதிக்குள் சுற்றிப் பார்க்க சென்றனர்.

Video of tiger chasing tourists bus goes viral

சுற்றுலா பயணிகள், வனத்துறையினரின் வாகனத்தில் ஏறி, வனப்பகுதிக்குள் சென்றனர்.
அவர்களுடன், 2 வனத்துறை ஊழியர்களும் உடன் சென்றனர். அப்போது, அங்குள்ள 2 புலிகள், சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தின் அருகில் வந்து நின்றுள்ளது.

அந்த நேரத்தில், வாகனத்திலிருந்த ஒரு  சுற்றுலா பயணி, கீழே இறங்க முயன்றார். சுற்றுலா பயணி கீழே இறங்க முயன்றதைக் கண்ட புலி, அவரை தாக்க முற்பட்டது. இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட சுற்றுலா பயணி வாகனத்தில் மீண்டும் ஏறியுள்ளார். இதனால், அந்த வாகனத்தை புலி தாக்கியது.

 

பின்னர், சுற்றுலா வாகனம் அங்கிருந்து கிளம்பிய நிலையில், அந்த புலி அவர்களை விரட்டியது. அப்போது, அந்த வாகனத்திலிருந்த நவீன், பிரகாஷ் ஆகிய 2 வனத்துறை ஊழியர்கள், தோழில் கிடந்த துண்டை புலியிடம் தூக்கிப் போட்டு, புலியை சீன்டினர். இதனையடுத்து, துண்டை கவ்விக்கொண்ட புலி, வாகனத்தை துரத்திக்கொண்டு ஓடியது. 

தற்போது, அந்த வீடியோ இணையத்தில் பரவியது. இதனையடுத்து, புலியை சீண்டி, கோபப்படுத்திய 2 வனத்துறை ஊழியர்களும் தற்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.