கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக 3 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

TN Govt new guidelines for corona lockdown

அதன்படி,

- நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படும்.

- ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்குச் செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.

- மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

- வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்குமே கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 

- பரிசோதனை உறுதி செய்யப்பட்டால், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

TN Govt new guidelines for corona lockdown

- வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

- கர்ப்பிணிப் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது..

- 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

- தனிநபர் மற்றும் ஒரு குழுவாகத் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் மக்கள் தவறாமல் தங்கள் வாகனத்திற்குத் தமிழக அரசின் பயண அனுமதி சீட்டு பெற வேண்டும்.