தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது! திமுகவில் யாரெல்லாம் அமைச்சர்கள் தெரியுமா?! இதோ, முழு பட்டியல்..
By Aruvi | Galatta | May 06, 2021, 05:02 pm
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ள நிலையில், அவருடன் அமைச்சர்களாகப் பதவி ஏற்க உள்ள 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டு உள்ளது.
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன் படி, நாளை காலை 9 மணிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
இந்த நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் உடன், அமைச்சர்களாகப் பதவி ஏற்க உள்ள 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை, தற்போது வெளியிட்டு இருக்கிறது.
அதன் படி,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம் துறைகளை கவனிப்பார்.
துரைமுருகன் - நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
பொன்முடி - உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்
ஏ.வ.வேலு - பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படுகிறது, நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறையும் ஒதுக்கப்படுகிறது.
ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு - தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது
ரெகுபதி - சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.முத்துசாமி - வீடு மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.பெரிய கருப்பன் - கிராமப் புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம்
கீதாஜீவன் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை
ராஜ கண்ணப்பன் - போக்குவரத்து துறை
கா.ராமச்சந்திரன் - வனத்துறை
சக்கரபாணி - உணவுத்துறை
செந்தில்பாலாஜி - மின்சாரத்துறை
ஆர்.காந்தி - கைத்தறித்துறை
பி.மூர்த்தி - வணிகவரி, பதிவுத்துறை
சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலம்
சேகர் பாபு - அறநிலையத்துறை
பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
சா.மு.நாசர் - பால்வளத்துறை
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை
மெய்யநாதன் - சுற்றுச்சூழல்
சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன்
த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில் நுட்பம்
மதிவேந்தன் - சுற்றுலாத்துறைஷ
கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை
ஆகிய 34 பேர் திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.