கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்த நிலையில், நகைகடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன்படி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் மற்றும் ஏழைகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களது வாழ்க்கையை மீட்டு கொடுத்துள்ளதாக ஏழை எளிய மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.