தமிழ்நாடு அரசின் இ-பாஸ் வலைத்தளங்கள் மற்றும் அதன் சலுகைகள் குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 54 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில்,  வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று முதல் தொடங்கிய நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

Tamil Nadu e pass guideliness corona lockdown

இதனால், பொதுமக்கள் தாங்கள் இருக்கம் இடங்களிலேயே முடங்கி உள்ளனர். பலரும், பணி மற்றும் அலுவலக நிமிர்த்தமாக வெளியூர் சென்றவர்கள், ஊர் திரும்பி முடியாமல் அப்படியே, தங்கி உள்ளனர்.

சிலர், முன்கூட்டியே திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்வுகளுக்கு திட்டமிட்டவர்களும் கூட, அவற்றை நடத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதேபோல், வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு வேலைக்கு சென்றவர்களும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில், பலரும் அன்றாட உணவுக்கே சிரமப்பட்டு வருவதாக அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டே இருந்தது.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்ட தமிழக அரசு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தமிழ்நாடு அரசின் இ-பாஸ் வலைத்தளங்களை உருவாக்கி உள்ளது. 

Tamil Nadu e pass guideliness corona lockdown

இதில், பொதுமக்கள் தேவையிருக்கும் பட்சத்தில், தமிழ்நாடு அரசின் இ-பாஸ் வலைத்தளங்களில் பதிவு செய்துகொண்டால், அவர்களுக்கு உரிய சலுகைகள் அளிக்கப்படும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,

- திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் விண்ணப்பிக்க https://tnepass.tnega.org என்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

- பிற நாட்டிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள் https://nonresidenttamil.org என்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

- வேறு மாநிலத்திலிருந்து தமிழ்நாடு திரும்பி வர வேண்டியவர்கள் https://rttn.nonresidenttamil.org என்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

- தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் https://rtos.nonresidenttamil.org என்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துகொண்டு, இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.