இந்தியாவில் மக்கள் மனம் வென்ற முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலின் முதலிடம்! முதல் 5 இடங்களில் பாஜக முதல்வர்கள் இல்லை!!
இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ள நிலையில், பட்டியலில் முதல் 5 இடங்களில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர்கள் யாரும் இல்லை என்ற தகவலும் இடம் பெற்று உள்ளன.
இந்தியா டுடே சார்பில் “இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார்? யார்?” என்று, கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்துக் கணிப்பில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து அந்தந்த மாநில மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த கருத்துக் கணிப்பின் முடிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியலில், 42 சதவீத ஆதரவுடன் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இதன் மூலமாக, “தன்னுடைய தனிப்பட்ட திறன் மற்றும் செயல்பட்டால் பொது மக்களிடம் மு.க. ஸ்டாலின் நன்மதிப்பு பெற்று இருப்பது” தற்போது உறுதியாகி இருக்கிறது.
மேலும், இந்தியா டுடே வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், “ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீத ஆதரவுடன் 2 ஆம் இடத்தை” பிடித்து உள்ளார்.
அத்துடன், “கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 35 சதவீத ஆதரவுடன் 3 ஆம் இடத்தையும், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே 4 ஆம் இடத்தையும்”
பிடித்துள்ளார்.
அதே போல், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி 5 ஆம் இடத்திலும்” இந்த கருத்துக் கணிப்பின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள மிகச் சிறந்த முதல்வர்களின் பட்டியலில், “முதல் 5 இடத்தில் இந்திய அளவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எந்த முதல்வர்களோ, பாஜகவுடன் கூட்டணியில் உள்ள எந்த மாநில முதல்வர்களோ அதில் இடம் பெறவில்லை” என்கிற அதிர்ச்சி தகவலும் இடம் பெற்று உள்ளது.
குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு தற்போது முற்றிலுமாக சரிந்து, 7 ஆம் இடத்திற்கு அவர்
தள்ளப்பட்டு உள்ளார்.
மேலும், பதவியேற்ற புதிதில் மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது முதல் 10 இடங்களில் கூட இடம் பெறாமல் பெரும் பின்னடைவை அவர் சந்தித்திருக்கிறார்.
அதே போல், “பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கம் 7 கோடி ஃபாலோயர்ஸ்களை கடந்து உள்ளது. இதன் மூலமாக, அதிக ஃபாலோயர்ஸ்ளை கொண்டுள்ள ஆக்டிவ்
அரசியல்வாதி என்ற சிறப்பையும் பிரதமர் மோடி கடந்த மாதம் பெற்றதும்” குறிப்பிடத்தக்கது.