“பெண்கள் படிக்க வேண்டும்.. தகுதிகேற்ற வேலைக்கு செல்ல வேண்டும்.. கல்வி தான் திருடமுடியாத சொத்து..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“பெண்கள் படிக்க வேண்டும், பட்டங்களை பெற வேண்டும், தகுதிகேற்ற வேலைக்கு செல்ல வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா சற்று முன்னதாக நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சீனியர் என்ற முறையில் நான் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன்” என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசத் தொடங்கியதும், அந்த அரங்கமே அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய முதல்வர், “நமது மாநில கல்லூரியில் கலைஞர் பெயரில் 2 ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.
தொடர்ச்சியாக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், “நான் படித்த மாநில கல்லூரி நிகழ்சியில் பங்கேற்பதில் இருமாப்படைகிறேன்” என்று, குறிப்பிட்டார்.
“உங்களது சீனியர் எனும் அடிப்படையில் மாணவர்களை வாழ்த்துகிறேன் என்றும், மிசா காலத்தில் ஓராண்டு சிறையிலிருந்த போது போலீஸ் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன்” என்றும், கூறினார்.
அத்துடன், “அறிவு சொத்துக்களை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநில கல்லூரி திகழ்கிறது” என்றும், தெரிவித்தார்.
மேலும், “படியுங்கள் பட்டம் பெறுங்கள். ஒரு பட்டதோடு நிறுத்தி விடாதீர்கள். பெண்கள் மிகுதியாக கல்வி பெற வேண்டும்” என்றும், முதல்வர் கேட்டுக்கொண்டார்.
“பட்டம் பெற்ற பெண்கள் தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பாக, “பெண்கள் படிக்க வேண்டும், பட்டங்களை பெற வேண்டும், தகுதிகேற்ற வேலைக்கு செல்ல வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
முக்கியமாக, “கல்வி தான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
“படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்றும், சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி இந்த மாநிலக் கல்லூரி என்றும். சென்னை பல்கலைக்கழகத்தின் தாய் நிறுவனம் மாநிலக் கல்லூரி தான்” என்றும், உற்சாகம் பொங்க முதல்வர் பேசினார்.
மிக முக்கியமாக, “முதல் தலைமுறை பட்டதாரிகள், விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அதிகம் படிக்கும் கல்லூரி மாநிலக் கல்லூரி” என்றும், முதலமைச்சர் பெருமையோடு சுட்டிக்காட்டி பேசினார்.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயதநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.