வரப்போகும் தமிழக தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? - கருத்துக்கணிப்பு நடத்திய தன்னார்வு அமைப்பு!
By Nivetha | Galatta | Sep 25, 2020, 03:02 pm
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சிக்கான வேலைகளில் இறங்கியுள்ளன. இன்னொரு பக்கம், பிரமாண்ட கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகின்றன. அப்படி செய்யப்பட்ட, ஒரு கருத்துக்கணிப்பில் அதிமுக ஆட்சியைமக்க 50.2 சதவதம் பேர் ஆதரவு என முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 2021 சட்டமன்ற தேர்தைல முன்னிட்டு MONN ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. அதன்படி, 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்ககையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோரிடம் மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரம் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள் பெறப்பட்டன எனக் கூறப்படுகிறது.
அதன்படி, வெளிவந்த முடிவுகளின் தொகுப்பு இங்கே...
* வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்றே கேள்விக்கு அதிமுக-50.2, திமுக-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவகித அளவில் வாக்குகைள பதிவு செய்திருந்தனர். தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7, இபிஎஸ்-27.9, மு.க.ஸ்டாலின்-26.6, ரஜினி-6.9, அன்புமணி-6.2, கமல்-3.7 சதவதம் என்ற அளவில் வாக்களித்திருந்தனர்.
* அதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம்-76.5, ஜெயலலிதாவின் செல்வாக்கு - 23.5 சதவதம் எனவும், அதிமுகவின் பலவனம் என்ற கேள்விக்கு இரட்டைத் தலைமை -65.4, ஆளுைமயற்ற நிலைமை-34.6 சதவதம் எனவும் பதிலளித்திருந்தனர்.
* தற்போதைய அதிமுக தலைவர்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்? என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-74.7, இபிஎஸ்-25.3 சதவிகிதம் வாக்களிக்கப்பட்டிருந்தது
* அதிமுகவில் இந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்றால் அந்த மாற்றம் எது? என்ற கேள்விக்கு ஒற்றைத்தைலைம-75.4, சசிகலா தைலைம-19.3, சசிகலா-டிடிவி இணைப்பு- 5.3 சதவதம் வாக்களிக்கப்பட்டிருந்தது
* அதிமுகவின் ஆட்சி நிலவரம் குறித்த கேள்விக்கு நன்று என 21.7 சதவதம் பேரும், பரவாயில்லை என 49.4 சதவதம் பேரும், மோசம் என 28.9 சதவதம் பேரும் வாக்களித்தனர்.
* திமுகவின் பலம், பலவனம் என்ற கேள்விக்கு பலம் என்ற பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு 78.6 சதவதம் பேரும், கட்சியின் கட்டுக்கோப்புதான் காரணம் என 21.4 சதவதம் பேரும், பலவனம் என்ற பகுதியில் கருணாநிதி இல்லாததே காரணம் என 66.2 சதவதம் பேரும், தலைமை சரியில்லை என 33.8 சதவதம் பேரும் வாக்களித்தனர்.
* திமுகவின் தலைமை மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வராக தகுதியானவர் என
41.6 சதவதம் பேரும், அவரிடம் கருணாநிதியின் ஆளுைம அறவே இல்லை என 42.8 சதவதம் பேரும், கட்சி பலமிழக்கிறது என 13.4 சதவதம் பேரும் வாக்குகைள பதிவு செய்தனர்.
* கோரிக்கை திட்டங்கைள நிறைவேற்றினால் ஆளும்கட்சிக்கு வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என 47.3 சதவதம் பேரும், சாத்தியமில்லை என 25.8 சதவதம் பேரும், கணிக்க முடியாது என 26.9 சதவதம் பேரும் வாக்களித்தனர்.
* ரஜினி, கமல் அரசியல் பிரேவசம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம் வரும் என 13.1 சதவதமும் , மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5 சதவிகிதமும் , வருகையே தேவையற்றது என 27.4 சதவதமும் வாக்குகள் பதிவாகின.
இந்த மேகா கருத்துக்கணிப்பு குறித்து மண் அறக்கட்டைளயின் தன்னார்வலர் பி.செல்லதுைரை கூறுைகயில், “இந்த கருத்துக்கணிப்பானது நடுநிைலேயாடு தமிழக அளவில் மக்களின் மனநிைலைய அறிந்துெகாள்வதற்காக தன்னார்வலர்கைள இணைத்து பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் மாதிரிகள் எடுப்பது என்பது இதுேவ முதல்முைற. இதன் மூலம் மக்களின் தெளிவான. மனநிைலைமைய வெளிக்கொணர வேண்டும் என்பேத எங்களது நோக்கம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க ேவண்டும் என்பைத 50.2 சதவதம் பேர் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அடுத்த கட்ட கருத்துக்கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தக் கருத்துக்கணிப்பு, மூன்றாவது முறையாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முடிவென்பது முழுக்க முழுக்க மக்களின் கைகளில்தான் இருக்கிறது. எந்தச் சூழலிலும், எது வேண்டுமாணாலும் நடக்கலாம் என்பதுதானே இயற்கை! காலம் இதற்கான விடையை சொல்லட்டும்!