மகளிர் சிறைச்சாலை & சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்குச் சென்ற அனுபவம் குறித்து மனம் திறந்த Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணி! சிறப்பு பேட்டி உள்ளே 

மகளிர் சிறைச்சாலை & சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்குச் சென்ற அனுபவம் குறித்து மனம் திறந்த Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணி! சிறப்பு பேட்டி உள்ளே  - Daily news

தமிழ்நாட்டின் முன்னணி கல்வியாளர்களின் ஒருவராகவும் மனிதநேயமிக்க சமூக ஆர்வலராகவும் திகழும் மதிப்பிற்குரிய டாக்டர் விமலா ராணி அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தமிழ்நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக என்றும் அழியாத கல்விச் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்கும் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள், செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். கடின உழைப்பின் அடையாளமாய் விளங்கும் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இது மட்டும் இன்றி தனது சீக் பவுண்டேஷன் சார்பாக 25 கிராமங்களை தத்தெடுத்து ஆண்டுதோறும் அந்த கிராமங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை செலவு செய்து அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவ சேவை, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பெண்களின் வளர்ச்சி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை டாக்டர் விமலா ராணி அவர்கள் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, “உங்களுடைய சீக் பவுண்டேஷனில் நீங்கள் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கும் நீங்கள் சென்று இருக்கிறீர்கள் அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களும் செய்திருக்கிறீர்கள் அந்தப் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு சென்ற அனுபவம் எப்படி இருந்தது?” எனக் கேட்டபோது, 

“எனக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் இருக்கும், நாம் நல்லதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது எதையுமே கற்றுக் கொள்ள முடியாது. எனவே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் சென்று இருக்கிறேன் அதன் பிறகு மகளிர் சிறைச்சாலைக்கு சென்று இருக்கிறேன். மகளிர் சிறைச்சாலையில் நான் சென்றபோது மரண தண்டனை பெற்ற பெண் கைதிகளை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படிப் பேசும்போது "தெரியாம பண்ணிட்டேன் மா அந்த நேரத்துல ஒரு கோபம் அந்தக் கோபம் இன்று என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டது” என்கிற அளவிற்கு அவர்களும் உணர்கிறார்கள். “தப்பே செய்யாமல் அந்த சூழ்நிலையில் நானே தப்பாகி விட்டு இப்போது உள்ளே இருக்கிறேன்” என்கிற அளவிற்கு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது “கைகுலுக்க முடியுமா?” என்று கேட்டார்கள் “உங்களுடைய கையை பிடிக்க முடியுமா?” என்று கேட்டார்கள் அதற்கென்ன தாராளமாக பிடிக்கலாம் என்று அவர்களுக்கு கை கொடுத்து விட்டு அவர்களோடு கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசி கட்டி பிடித்து விட்டு வந்தேன்” என்றார். மேலும் தனது சாதனை பயணத்தின் பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Leave a Comment