தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த ஒரு தரமான கல்வி நிறுவனமாக திகழும் செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்கும் மதிப்பிற்குரிய திருமதி.டாக்டர் விமலா ராணி அவர்கள் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் முன்னணி தொழில் அதிபருமான மதிப்பிற்குரிய திரு.சேவியர் பிரிட்டோ அவர்களின் மனைவி ஆவார். குழந்தைகளின் கல்வி மீது மிகுந்த அக்கறை கொண்ட திருமதி.டாக்டர் விமலா ராணி அவர்கள் தங்களது செயின்ட் பிரிட்டோ அகாடமியின் வாயிலாக உலக தரத்திலான கல்வியை வழங்கி வருகிறார். ஆகச்சிறந்த கல்வியாளராக மட்டுமல்லாமல் மனிதநேயமிக்க சமூக ஆர்வலராகவும் திகழும் டாக்டர் விமலா ராணி அவர்கள் தனது சீக் பவுண்டேஷன் சார்பில் எண்ணற்ற சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 25 கிராமங்களை தேர்ந்தெடுத்து அந்த ஒவ்வொரு கிராமங்களுக்கும் தேவையான மருத்துவ வசதி, குழந்தைகளுக்கான நலன் மற்றும் பெண்களுக்கான வளர்ச்சி உட்பட பல்வேறு விதமான நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார். மேலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு அவர்களுக்கும் மிகவும் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்கள் தனது சாதனை பயணம் குறித்து மனம் திறந்து பேசினார். தங்களது முதல் வீடு பற்றியும் அந்த வீட்டின் ராசியால் அந்த வீட்டை தளபதி விஜய் அவர்களுக்கு கொடுத்தது பற்றியும், பின்னர் அதைவிட ஒரு பெரிய வீடாக தற்போது இருக்கும் ஒரு வீட்டிற்கு வளர்ந்து வந்தது பற்றியும் பகிர்ந்து கொண்ட டாக்டர் விமலா ராணி அவர்கள் தொடர்ந்து பேசிய போது, “அதே மாதிரி முதல் கார் என்று வரும் போது ஸ்டாண்டர்ட் 1000 என்று இப்போது மார்ச்சுவரி வேனாக பயன்படுத்துகிறார்கள் அல்லவா அந்த காரை தான் வாங்கினோம். ஏனென்றால் அந்த கார் தான் 12 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தது அப்போதெல்லாம் தொழிலில் ஒரு கார் மிகவும் அத்தியாவசியமாக இருந்தது. மேலும் இதற்குக் கீழ் எந்த காரும் கிடைக்காது. ஒரு நான்கு சக்கரத்தோடு 12 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வண்டி வேண்டும் என்றால் இந்த கார் தான் கிடைக்கும் அதனால் அந்த கார் வாங்கினோம் ஆனால் இன்று ரோல்ஸ் ராய்ஸ் இருக்கிறது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் பேசும் போது நீங்களே சொன்னீர்கள் மார்ச்சுவரி வண்டியில் இருந்து ஆரம்பித்து தற்போது ரோல்ஸ் ராய்ஸ் வரை உங்களது கணவரும் உங்களோடு சேர்ந்து உங்களை அழைத்து வந்திருக்கிறார். நீங்களும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள் என்று சொன்ன போது, “இரண்டு கைகள் சேர்ந்தால் தான் சத்தம் வரும் எங்கேயுமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து செயல்படும்போது அது எதுவாக இருந்தாலும் ஒரு குடும்பம் வளர்வதாக இருக்கட்டும் ஒரு தொழில் வளர்வதாக இருக்கட்டும் நம்மை சுற்றி இருக்கும் ஒரு ரிலேஷன்ஷிப் வளர்வதாக இருக்கட்டும் அது ஒரு பெரிய வித்தியாசத்தை கொடுக்கும்” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் திருமதி டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த சிறப்பு பேட்டியில் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.