தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமியின் நிறுவனர் டாக்டர்.விமலா ராணி அவர்கள். தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய டாக்டர் விமலா ராணி பிரிட்டோ அவர்கள் VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் தங்களது சாதனை பயணத்தின் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது, “தமிழ்நாட்டில் Fefdy என்கிற பாடத்திட்டம் இருக்கிறது அதை நீங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்கள் இன்னும் கொடுக்கப் போகிறீர்கள் நிறைய குழந்தைகளுக்கு… இதன் மூலம் படிப்பின் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மிக ஆழமாக உள்ளது என்று தெரிகிறது. இதைத் தவிர நீங்கள் ஒரு சமூக ஆர்வலராகவும் இருக்கிறீர்கள் மற்றும் சமூக சேவை காரியங்களும் செய்து வருகிறீர்கள் இவை அனைத்தையும் எப்படி சமமாக மேற்கொள்கிறீர்கள் என்றும் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது..” எனக் கேட்டபோது, “நான் சுயமாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன் சீக் என்னும் அமைப்பை மகளிர் அதிகாரம் மற்றும் குழந்தை வளர்ச்சியை மையப்படுத்தி நடத்தி வருகிறேன். 12 வருடங்களாக இதை நான் நடத்தி வருகிறேன் சீக் பவுண்டேஷன் 25 கிராமங்களை தத்தெடுத்துள்ளது.” என்றார்.
தொடர்ந்து அவரிடம், “25 கிராமங்களை தத்தெடுத்துள்ளீர்கள் என்ன செய்து இருக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, “25 கிராமங்களையும் நாங்கள் தத்தெடுத்து ஒவ்வொரு ஐந்து கிராமங்களுக்கும் ஒரு மையம் அமைத்திருக்கிறோம் ஏனென்றால் ஒவ்வொரு கிராமங்களில் நிறைய பேர் இருப்பார்கள் ஒவ்வொரு கிராமங்களில் ஆட்கள் கம்மியாக இருப்பார்கள் அதனால் ஒவ்வொரு ஐந்து கிராமங்களுக்கும் ஒரு மையத்தை அமைத்து அதன் மூலமாக மகளிர் அதிகாரம் சார்ந்த சிறு தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கிறோம். மேலும் குழந்தைகளுக்காக கல்வி மையங்களை அமைத்துள்ளோம் அதில் கணினிகளின் வசதிகளோடு ஆசிரியர்களையும் நியமித்துள்ளோம். எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நாங்கள் இந்த கிராமத்திற்கு அழைத்து வருவோம் மூன்றாம் வகுப்பில் இருந்து நாங்கள் இதை செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக்கூட சுற்றுலா மாதிரி இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் இதை நாங்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாக எடுத்துச் செல்கிறோம் எங்கள் பள்ளியில் மற்ற நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த ஒரு நாளில் மட்டும் நாங்கள் விடுமுறையை அனுமதிப்பதில்லை. ஏனென்றால் இந்த ஒரு நாளில் இந்த பயணத்தில் அவர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள். நீங்கள் பாருங்கள் என்றால் எங்கள் அமைப்பில் பிலிவ் யூ கேன் என்ற ஒரு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். அதில் கலாச்சார வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி சார்ந்த நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். அதை நடத்துபவர்களே எங்கள் பள்ளியிலிருந்து நாங்கள் அழைத்துச் செல்லும் குழந்தைகள் தான் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் மூலம் எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளே அந்த கிராமத்திற்கு அந்த கிராமங்களுக்கு சென்று இதை நடத்துவார்கள்.” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட Dr.விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.