தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர்.விமலா ராணி அவர்கள் மனநலம் குன்றிய கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் பயிலும் சிறப்பு பள்ளிகளில் ஒன்றான டான் கனிலா பள்ளிக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் மேற்கொள்வதோடு அங்கு இருக்கும் ஆசிரியர்களுக்கான முழு சம்பளமும் வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக என்றும் அழியாத கல்விச் செல்வத்தை தொடர்ந்து தரமான முறையில் வழங்கி வரும் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது 25 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்த செயின்ட் பிரிட்டோ அகாடமி செயலாளர் மதிப்பிற்குரிய டாக்டர் விமலா ராணி அவர்கள் தனது சாதனை பயணத்தின் அனுபவங்களையும் தனது செயின்ட் பிரிட்டோ அகாடமி சிறப்பம்சங்கள் குறித்த பல முக்கிய விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக தனது சீக் பவுண்டேஷன் சார்பாக 25 கிராமங்களை தத்தெடுத்து அவற்றுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குழந்தைகளுக்கு தேவையான கல்வி மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் முதலிய பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த சீட் பவுண்டேஷன் சார்பில் குழந்தைகளின் கல்வி மற்றும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி தொடர்பாக செய்யப்படும் செயல்பாடுகள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது, "உங்களது சீக் பவுண்டேஷன் சார்பாக நிறைய குழந்தைகளின் படிப்பு செலவுக்கு நிதி உதவி வழங்குவதாக தெரிவித்திருக்கிறீர்கள். அதிலும் முக்கியமாக கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக இயங்கும் டான் கானிலா பள்ளியின் மூலம் சிறப்பான முறையில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறீர்கள்.." என அது பற்றி கேட்டபோது,
“டான் கானிலா பள்ளி மிகவும் பிரத்தியேகமாக மனநலம் குன்றிய கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக இயங்குகிறது. கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மனநலம் குன்றிய கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளாக இருப்பவர் தான். கண்டிப்பாக அவர்களை சாதாரண பள்ளிக்கூடத்தில் வைக்க முடியாது. ஏனென்றால் அவர்களுடைய தேவைகளே வேறாக இருக்கும். அப்படி இருக்கும் போது அந்த பள்ளியில் உள்ளவர்களோடு இணைந்து அவர்களுக்கு தேவையான சீருடைகளிலிருந்து எல்லாமே பார்க்கிறோம். ஏனென்றால் அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அங்கு இருக்கும் ஆசிரியர்களுக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுக்கிறோம். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள் அவர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு தேவையான வாகன உதவி மற்றும் அவர்களது பயிற்சி மற்றும் அங்கு இருப்பதற்கான எல்லா வசதிகள் செய்கிறோம். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் அங்கு இருக்கும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மொத்தம் அங்கே ஐந்து ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு மொத்த சம்பளமும் நாங்கள் கொடுக்கிறோம்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் தனது சாதனை பயணத்தின் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.