12 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி என தத்தெடுத்த கிராமங்களுக்கு தரமான நலத்திட்டங்கள்... Drவிமலா ராணியின் ஸ்பெஷல் பேட்டி!

12 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி என தத்தெடுத்த கிராமங்களுக்கு தரமான நலத்திட்டங்கள்... Drவிமலா ராணியின் ஸ்பெஷல் பேட்டி! - Daily news

தனது சீக் பவுண்டேஷன் சார்பில் டாக்டர் விமலா ராணி அவர்கள் கிராமங்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். ஆகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உலக தரத்தில் பல அட்டகாசமான பாட முறைகளில் கல்வியை வழங்கி வரும் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது தனது சாதனை பயணத்தில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள். தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவி தற்போது தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக செயின்ட் பிரிட்டோ அகாடமியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். மேலும் தனது சீக் பவுண்டேஷன் மூலமாக 25 கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசிய தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் உட்பட மிகவும் முக்கியமான மருத்துவ சேவைகள் என பல்வேறு விதமான பல நற்பணிகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிறகு பேட்டி கொடுத்த டாக்டர் விமலா ராணி அவர்கள் தனது சீக் பவுண்டேஷன் சார்பில் கிராமங்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்து பேசிய போது, “இதற்காக நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? இதற்காக நான் இவ்வளவு பணம் ஒதுக்கி வைக்கிறேன் , ஃபவுண்டேஷனுக்காக இதை செய்யவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது அப்படி என்றால் அது எந்த மாதிரி?” எனக் கேட்டபோது, “அப்படி பார்த்தீர்கள் என்றால் ஒரு வருடத்திற்கு இரண்டு கோடிக்கு மேல்.” என்றார். தொடர்ந்து பேசும்போது, “எல்லோருக்கும் ஆசையே பணத்தின் மீதுதான்... எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது பத்தாது என்று சொல்லும் போது இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் இன்னும் நிறைய சேர்த்து வைக்க வேண்டும் என்றெல்லாம் இருக்கும்போது, சம்பாதித்ததில் ஒரு பங்கை சமூக சேவைக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கிடுவது ஒரு சிறந்த காரியம் தான். எத்தனை வருடங்களாக இதை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, 

“இதை 12 வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன். மேலும் இது பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த இரண்டு கோடி ரூபாய் நான் இதுவரை மொத்தமாக செலவு செய்தது இல்லை. வருடா வருடம் இரண்டு கோடி ரூபாய் குறைந்தபட்சம் செய்கிறேன். இதைவிட முக்கியமானது ஒவ்வொருவருடைய நேரம். நான் அதை இன்னும் அதிகமாக மதிக்கிறேன். அப்படி பார்க்கும்போது என்னுடைய செயின்ட் பிரிட்டோ அகாடமிகள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் 120 ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களுடைய நேரத்தை தொடர்ச்சியாக இதற்காக செலவழித்து வருகிறார்கள் வெறும் அந்த தொடர்ச்சியான நிகழ்வுகள் மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் அந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதற்கான இதர சில விஷயங்களை செய்து வருகிறோம். அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான வளர்ச்சிக்காக செய்து வருகிறோம்." என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட டாக்டர்.விமலா ராணி அவர்களின் இந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் முழுவதுமாக காணலாம்.
 

Leave a Comment