20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் பரவல்!
By Aruvi | Galatta | May 14, 2020, 12:41 pm
சீனாவிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில், 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் சீனாவிலிருந்து தான் பரவியது என்று, தொடக்கம் முதலே அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இதனை ஏற்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனிடையே, தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு, உலகம் முழுவதும் 47.27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், கொரோனா உயிரிழப்பு மற்றும் பாதிப்புக்கு சீனா சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியுள்ளார்.
அத்துடன், சீனாவிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளதாகவும், ராபர்ட் ஓ பிரையன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
அதேபோல், சீனாவின் வூஹான் நகரிலிருந்து தான் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவியுள்ளதாகவும், அது எப்படிப் பரவியது என்பது குறித்து ஆதாரங்களை அமெரிக்கா சேகரித்து வருவதாகவும், ராபர்ட் ஓ பிரையன் கூறியுள்ளார்.
இது குறித்து, மக்கள் மத்தியில் சீனா தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ராபர்ட் வலியுறுத்தினார். கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அமெரிக்கா அனுப்பிய போது, சீனா அதனை ஏற்க மறுத்துவிட்டது என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட 5 கொள்ளை நோய்கள் சீனாவிலிருந்து பரவியுள்ளது என்றும், ராபர்ட் குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில், வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனாவிற்கு உதவி செய்வதற்கு உலக நாடுகள் தயாராக இருப்பதாகவும், இனி இப்படியொரு சம்பவம் நடக்காத வகையில் சீனா உரிய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும் என்றும் ராபர்ட் ஓ பிரையன் கேட்டுக்கொண்டார்.