பல்வேறு தொழில் முனைவில் பலதரப்பட்ட தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு தலைசிறந்த செயல்பாடுகளினால் முன்னணி நிறுவனமாய் திகழ்ந்து வருவது ஆதித்யராம் குழுமம். கடந்த இரண்டு தசாப்தங்களாக வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு பல சேவைகளை ஆதித்யராம் குழுமம் செய்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தனது ஆகசிறந்த பன்முக முயற்சியினால் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு அடையாளமாய் ஐகான் ஆப் தி தமிழ்நாடு, 2021 ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர், சிறந்த தொழில்முனைவோர் என்று பல விருதுகளை குவித்து தனித்து தெரியும் ஆதித்யராம் குழுமம் தற்போது தென்னிந்தியாவில் முதல் முறையாக அனைவரையும் வியப்பில் ஆழ்துமளவு புது முயற்சியை கையிலெடுத்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் அருகே தென்னிதியாவில் முதல் முறையாக ‘ஆதித்யராம் பேலஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்ட அரண்மனையை திறந்துள்ளது. பிரம்மாண்ட அரண்மனை தோற்றத்தில் அதி சிறந்த வடிவமைப்பில் வில்லாக்களை ரியல் எஸ்டேட் பிரிவில் கட்ட இருப்பதாக அறிவித்திருந்தது. இது ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் குறிப்பிடதக்க முயற்சியாகும், அதன்படி ஆடம்பர வாழ்வியலுக்கு உகந்து கட்டிடக் கலையில் புது நிகழ்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஆதித்யராம் பேலஸ்’ உருவாகியுள்ளது.
இந்த அரண்மனை திறப்பு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் ஆதித்யராம் குழுமத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆதித்யராம், தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்யராம் குழுமத்தின் கட்டிடகலைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ‘ஆதித்யராம் பேலஸ்’ ஆதித்ய ராம் குழுமத்தின் நேர்த்தியான கட்டிட வடிவமைப்பு கலைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்துள்ளது. இந்த பேலஸ், பறந்து விரிந்த தோட்டங்கள், மிகவும் நுணுக்கமாக வட்டிவமைக்கப் பட்ட கட்டிடத்தின் உட்புற அமைப்புகள், கம்பீரமான முற்றங்கள், அதி நவீன வசதி கொண்டு உருவாகியுள்ளது.
இந்த திட்டம் குறித்து ஆதித்யராம் குழுமதத்தின் நிறுவனர், தலைவர், நிர்வாக இயக்குனர் ஆதித்ய ராம் கூறுகையில், “தென்னிந்தியாவின் மிகப்பெரிய அரண்மனை வடிவிலான வில்லாக்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆடம்பரம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை மறுவரையறை செய்யும் அடையாளச் சின்னங்களை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இதுபோன்ற ஆடம்பர கட்டுமானத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வேறு எங்கும் இல்லாத ஒரு அரச வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போது இந்த முயற்சி பெரிதும் கவரப்பட்டு பேசுபொருளாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.