“என் வீட்டுக்கு ரெய்டு வந்தால்.. வருபவர்களே டீ வாங்கி கொடுக்க வேண்டும்” சீமான் கலாய்..
“என்னுடைய வீட்டிற்கு ரெய்டு வந்தால், வருபவர்கள் தான் டீ வாங்கி கொடுத்துச் செல்ல வேண்டும்” என்றும், கலாய்க்கும் விதமாக சீமான் பேசி கலாயத்து உள்ளது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் தேர்தல் திருவிழா தொடங்கியிருக்கிறது.
அதாவது, தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித்த் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக, அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட அந்த 9 மாவட்டங்களிலும் விறுவிறுப்படைந்து உள்ளன.
அந்த வகையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிரமான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அத்துடன், திமுக வேட்பாளர்களை ஆதாரத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி, தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் முன்னதாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமை ஒருங்கினைபாளர் சீமான் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்வில் பேசிய சீமான், “சாதி மதம் என்றைக்கு வீழ்கிறதோ அன்றைக்குத் தான் தமிழர்கள் வளர்வார்கள்” என்று, குறிப்பிட்டார்.
“எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது நம்முடைய பிரச்சனையாக நினைத்துப் போராட வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், “சாதி வாக்குகள் எங்களுக்கு வேண்டாம், தமிழர் என்று நினைத்தால் மட்டும் எங்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள்” என்றும், பொது மக்களைப் பார்த்து அவர் பேசினார்.
குறிப்பாக, “என்னுடைய வீட்டிற்கு ரெய்டு வந்தால், வருபவர்கள் தான் டீ வாங்கி கொடுத்துச் செல்ல வேண்டும்” என்றும், கலாய்க்கும் விதமாகப் பேசினார்.
மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் என் மீது வழக்கு உள்ளது” என்று, சீமான் குறிப்பிட்டார்.
முக்கியமாக, “தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை மக்களை விவசாயம் செய்ய வைத்து, அவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும்” என்றும், தமிழக அரசை சீமான் கேட்டுக்கொண்டார்.