மனித வாழ்வில் அவரை நாகரீகமாகவும் வளமாகவும் நடத்த கூடிய ஒரு திறன் கல்வி. அத்தகைய கல்வியை முறையாக கொடுத்து மாணவர்களின் எதிர்காலத்தை சரியான வழியில் கொண்டு செல்ல தரமான கல்வியை வழங்கி வரும் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக சத்யாபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இருந்து வருகிறது.
மாணவர்களின் கல்வியை தரத்துடன் வசதியான வழிவகையில் கொடுத்து வரும் சத்தியபாமா பல்கலைக்கழகத்தை மேலும் அங்கீகரிக்கும் வகையில் சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற உச்சபட்ச அங்கீகாரத்தை ‘நாக்’ கவுன்சில் வழங்கியுள்ளது.
மாணவர்களின் கல்வி பயணத்தில் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற சத்யபாமா பல்கலைக் கழகத்திற்கு ஏ பிளஸ் பிளஸ் அன்கீகாகரத்தை கொடுத்தது குறித்து கல்லூரி நிர்வாகம், “நிபுணர் பரிந்துரை அடிப்படையில் ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற உயர் தர அங்கீகாரத்தை ‘நாக்’ கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த சாதனையை படைக்க உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர், தொழில்நுட்ப பல்கலைகழகத்தோடு இணைந்து செயல்படும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரியின் உள்கட்டமைப்பு, மாணவர் – ஆசிரியர் விகிதம், பாடப்பிரிவுகள், தேர்ச்சி நூலகம் என ஏழு வகை வசதிகளின் படி ‘நாக்’ கவுன்சில் ஏ ++, ஏ +. ஏ, பி ++, பி +, பி போன்ற 6 தர நிர்ணயங்களை வழங்குகிறது. உயர் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த மதிப்புகள் கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது இந்த தர நிர்ணயத்தில் உச்சபட்ச மதிப்பான ஏ ++ தர நிர்ணயத்தை சத்யாபாமா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.