ஊரடங்கிற்குப் பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
By Aruvi | Galatta | Apr 22, 2020, 11:03 am
ஊரடங்கிற்குப் பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக, தமிழகத்தில் 2வது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளரப்படும் பட்சத்தில், பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- அனைத்து பணியாளர்களும் முக கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- மணிக்கு ஒரு முறை தங்களது கைகளைச் சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- பேருந்தில் ஏறும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவும் இல்லாமல் இருந்தால், பயணம் செய்ய அனுமதி கிடையாது.
- பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும், சமூக இடைவெளியினை கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே, பேருந்தில் அனுமதிக்க வேண்டும்.
- அவரசர் பயன்படுத்தும் பொருட்களை செல்போன், சாவி, மேசை, சேர் உட்பட, அவர்களே தங்களது பணி நேரத்தில் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பணி முடிந்து செல்லும்போது, கட்டாயம் அவரவர் பயன்படுத்திய பொருட்களைச் சுத்தம் செய்த பிறகே செல்ல வேண்டும்.
- காய்ச்சல் மற்றும் கொரோனா சம்மந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், முறைப்படி விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அவரவர் பணியிடங்களில் தொடர்ந்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- அனைத்து பணியாளர்களும், பணியின்போது 50 ML Sanitizer வைத்திருக்க வேண்டும்.