கொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்!
By Aruvi | Galatta | May 25, 2020, 12:35 pm
கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட மாநிலம் உத்தம் சிங் மாவட்டத்தில் உள்ள கிச்ஹா என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள், கொரோனா பரவல் காரணமாகப் பலர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி இரவு இந்த கொரோனா தனிமை முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் மது அருந்தி விட்டு கடும் போதையிலிருந்துள்ளார்.
மது போதை காரணமாக, அந்த போலீசார் கொரோனா முகாமுக்குள் சென்றுள்ளார். அங்குத் தனியாக இருந்த கொரோனா பாதிக்கப்பட்ட வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, சில்மிஷம் செய்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
அப்போது, கடும் கூச்சலிட்ட அப்பெண், அந்த போலீசாரை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளதால், இந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில், அந்த பெண்ணின் ஆடைகள் முழுவதும் கிழிந்துள்ளது.
இதில், பயந்துபோன அந்த பெண், தன் குடும்பத்தினரும் செல்போனில் கூறி, கதறி அழுந்தள்ளதார். இதனையடுத்து, அந்த பெண் சார்பாக அவரது குடும்பத்தினர், அந்த மாவட்டத்தின் எஸ்.பிக்கு புகார் அளித்தனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அந்த போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பே திருமணமானது குறிப்பிடத்தக்கது.