பெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வண்டியை பாதுக்காப்பது எப்படி?
Galatta | Feb 15, 2021, 11:52 am
சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதாக, தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுரை விடுத்துள்ளது.
பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து இருப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாகனத்தை கழுவும்போதும், மழை பெய்யும்போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை எத்தனால் கலந்துள்ள பெட்ரோலில் தண்ணீர் இறங்கினால், வாகனத்தை இயக்குவது கடினமாகும் அல்லது வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் போது ஜெர்க் ஆகும். பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால், எத்தனால் டேங்கின் அடிப்பகுதியில் தங்கும். இதனால் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் போக வாய்ப்புகள் அதிகம். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.