இன்று சந்திர கிரகணம்! இரவில் என்ன நடக்கும்..?
By Aruvi | Galatta | 01:51 PM
இன்று சந்திர கிரகணம் வருவதை முன்னிட்டு, இரவு நேரத்தில் வானில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர்.
கிரகணம் என்றாலே, நம் மக்கள் பீதியில் உரைந்துபோய் விடுவார்கள். ஆனால், இன்று இரவு வானில் நிகழும் சந்திர கிரகணம் அப்படியில்லை. இன்று நிகழும் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் அனைவரும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சூரியனுக்கும் - சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு தான், சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சந்திர கிரகணமானது, இந்த ஆண்டு மட்டும் சுமார் 4 முறை நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதேபோல், வரும் ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30 ஆகிய தேதிகளிலும் சந்திர கிரகணம் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன்படி, முதல் கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது.
இன்று சரியாக, இரவு 10.37 மணி முதல், நாளை அதிகாலை 2.42 மணி வரை இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.
குறிப்பாக, இன்று வரும் சந்திர கிரகணம், பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே, சந்திரனில் விழுகிறது. இதனால், இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.