தமிழகத்தில் ஜவுளி கடைகள், நகை கடைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை அதிகமான நிலையில், கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடித்துக்கொண்டே வந்தன. மே மாதம் தொடங்கி தற்போது வரை 6 வார காலம் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

6 வது முறையாக பிறப்பிக்கப்படட இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் தொடங்கி உள்ளது. கடந்த 25 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து 7 வது  முறையாக வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரித்து வெவ்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவை அரசு தற்போ அமல்படுத்து வருகிறது.

அதன் படி, 3 ஆம் வகை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்  அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளைச் செய்யும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று காலை முதல் அனைத்தும் பழைய முறையில் வழக்கம் திறக்கப்பட்டன.

அந்த வகைியல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள், காம்ப்ளக்ஸ என எல்லாம் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவை அனைத்தும் பல மாதங்களுக்கு பிறகு, இன்று காலை திறக்கப்பட்டன.

இவற்றுடன் ஜவுளி கடைகள், நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், அவைகளும் இன்று காலை முதல் திறக்கப்பட்டன.

குறிப்பாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் உள்ள பிரசித்தி வழிபாட்டு தலங்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில்களில் அனைத்தும் மக்கள் வழிபடுவதற்காக இன்று காலை முதல் திறக்கப்பட்டன.

இந்த அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், பக்தர்களின் உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
 
இவற்றுடன், கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை என்றும், சாமி தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமத்தை பொட்டலங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 

அதாவது, தமிழகத்தில் கடந்த 63 நாட்களுக்கு பிறகு சென்னையில் உள்ள மசூதிகளில் தொழுகை இன்று காலை நடந்தது. 

அதே போல், சென்னை எழும்பூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் உள்ளிட்ட முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களும், இன்று காலை முதல் திறக்கப்பட்டு கிறிஸ்துவ இறைமக்கள் அனைவரும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.