அனைந்திய வானொலியில் மனதில் குரல் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றினார். அப்போது  தமிழகத்தைச் சேர்ந்த பெண்னை பாராட்டியுள்ளார். 


கோவையைச் சேர்ந்த காயத்ரி என்றவர், தனது தந்தையின் உதவியால், கால்கள் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி அமைத்துக் கொடுத்துள்ளார். 


விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா , விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் பழமையான தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார். ஹேமலதா பாடத்தின் 53 பிரிவுகளையும், விலங்குகளைக் கொண்ட வீடியோவாக மாற்றி, மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறார்.  இந்த வசதி பாடங்களை வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர், மாணவர்களுக்குப் பெரிதும் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்குத் தீர்த்து வைத்துள்ளார்.

 
கோவையைச் சேர்ந்த காயத்ரி , விழுப்புரத்தைச் சேர்ந்த என்.கே.ஹேமலதா ஆகியோரின் இந்த செயல்களை மான் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார் மோடி.