அதிமுக அமைச்சர்கள் , சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக ஊழல் கட்சி என்று தொடர்ந்து விமர்சித்து வந்ததையொட்டி, அதை திமுக தரப்பில் கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் ஊழல்கள், 2021 மே மாதத்திற்கு பிறகு முழுமையாக தெரியும். சவாலை ஏற்பதற்கு முன்பு, முதல்வரின் சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை நீக்கி, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கவும்.
வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக தன் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு, ஆளுநருக்கு கடிதம் எழுதுமாறும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊழல் பற்றி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவாலை விடுத்து இருந்தார். இந்த சவாலை ஏற்ற ஸ்டாலின் , விவாதத்திற்கு தேதி , இடம் குறியுங்கள்; அமைச்சரவை சகாக்களுடன் - ஓ.பன்னீர் செல்வத்தையும் அழைத்து வாருங்கள்! நான் மட்டும் வருகிறேன்; ஊழல் பற்றி விவாதிப்போம் “ என்று தெவித்து இருக்கிறார்.