காதலுக்கு எதிராக நின்றாரா அதிமுக பிரமுகர்? தற்கொலை செய்துகொண்ட காதலி.. தீக்குளித்த காதலன்..! அரசியல்வாதி கைது..
By Aruvi | Galatta | Apr 14, 2021, 01:43 pm
காதல் விவகாரத்தில் காதலி தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக, அதிமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்து உள்ள பனையங்கால் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், பக்கத்து ஊரான பூலாங்குலத்தைச் சேர்ந்த நம்பு கலாவும், காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இளம் ஜோடியின் காதல் திருமணத்திற்கு, இரு வீட்டார் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், காதலன் பிரவீனும், காதல் மனைவி நம்பு கலாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்து வந்தனர்.
இப்படியான நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சிலரின் தூண்டுதலின் பேரில், அங்குள்ள பி.கீரந்தை ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான அதிமுகவை சேர்ந்த அற்புதராஜ் என்பவர், காதல் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகளை மிக கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த காதல் திருமணம் தொடர்பாக அங்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், காதலன் பிரவீனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காதல் மனைவி நம்புகலா, கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காதல் கணவன் பிரவீன், எலிமருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பிரவீனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிர் பிழைத்து அவர் வீடு திரும்பினார்.
இப்படியான நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட நம்பு கலா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காதல் கணவன் பிரவீன் மற்றும் அவரது தாயார் புஷ்பாவும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்த பிரவீன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், “அதிமுக பிரமுகர் அற்புதராஜ் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனை கொடுக்காததால் தான் தங்கள் மகனின் காதலைப் பிரித்து, அவரது இறப்புக்கு அவர் காரணமாக அமைந்தார்” என்றும், பிரவீனின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிமுக பிரமுகர் அற்புதராஜை அதிரடியாக கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தின வருகின்றனர். இச்சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.