மீண்டும் எரிக்கப்பட்டாள் கண்ணகி! சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை..
By Aruvi | Galatta | 08:13 PM
சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து, காதலன் உட்பட 3 பேர் சேர்ந்து எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“கண்ணகியை எத்தனை முறைத்தான் எரிப்பார்கள், இந்த காமத் தீ பற்றியவர்கள்?”
“மனைவியாக சீதைகள் தான் வேண்டும் என்பவர்கள், ஏன் பெண்களை பாஞ்சலிகளாக நினைக்கிறார்கள்?”
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அடுத்துள்ள தெற்கு தினாஜ்புர் மாவட்டம், குமார்கஞ்ச் பகுதியில் தான் இப்படியொரு கொடூரம் அரங்கேறியிருக்கிறது.
தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் குமார்கஞ்ச் பகுதியில் உள்ள புல்பரி உயர்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி படித்து வந்தாள்.
இந்நிலையில், சிறுமி அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த வாரம் சிறுமியை நம்ப வைத்து தனியாக வரவைத்த காதலன், தன்னுடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளான்.
இதில், அந்த பெண் கதறி அழுது, அவர்களிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சி, கையெடுத்து கும்பிட்டு அழுதுள்ளார். ஆனால், அந்த காமுகர்கள் விடவில்லை. அவர்கள் 3 பேரும் மாறி மாறி சிறுமியை சிதைத்துள்ளனர்.
பின்னர், உயிரோடு விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்த அவர்கள், தடயங்களை அழிக்கும் நோக்கில், சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுமியை அங்குள்ள பாலத்துக்குக் கீழே போட்டுவிட்டு, தப்பித்து சென்றுள்ளனர். பின்னர், கடந்த 6 ஆம் தேதி, எரிந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுத்த போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சிறுமி கொல்லப்பட்ட விபரங்களை அறிந்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இப்படியொரு கொடூரமான செயலை செய்தவர்கள், அந்த சிறுமியின் காதலன் தான் என்பதை கண்டறிந்தனர்.
பின்னர், காதலன் உட்பட 3 பேரை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, பலுர்காட் அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதனிடையே, குற்றவாளிகள் 3 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமி பயின்று வந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
“பூக்களை பறிக்காதீர்கள்” என்று சொன்னபோய், “பறித்தாலும் பரவாயில்லை.. தயவு செய்து கசக்காதீர்கள்” என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.. இந்த காமம் படிந்த சமூகத்தில்.