ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்த ஈஷா… காண்போரைக் கவர்ந்த கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்!

ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்த ஈஷா… காண்போரைக் கவர்ந்த கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்! - Daily news

கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் ஈஷாவில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருநாளான கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது. இந்தியாவின் பாரம்பரியமான திருவிழாக்களில் ஒன்றாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீப திருவிழா. கார்த்திகை மாதத்தில் மக்கள் தங்களது வீடுகளிலும் கோவில்களிலும் எண்ணற்ற விளக்குகளை ஏற்றி கொண்டாடும் இந்த திருவிழா ஈஷா மையத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில், ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 24-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனையும் நடைபெற்றது. லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகமும், அதை தொடர்ந்து நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது.

ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் நேரம் தான் கார்த்திகை தீப வழிபாடு. பாரம்பரியமாக சந்திர நாட்காட்டியில் கார்த்திகை மாதத்தின் திரயோதசி (13 வது நாள்) அன்று கொண்டாடப்படுகிறது. இது குளிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அனைத்து வாழ்க்கையும் மெதுவாக இருக்கும். தீபாவளியுடன் தொடங்கும் இந்த மாதங்களின் கொண்டாட்ட அம்சம், ஆழ்ந்த அறிவியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒரு நபர் நோய்வாய்ப்படாமல் அல்லது சமநிலை மற்றும் நோக்கத்தை இழக்காமல் இருண்ட குளிர்காலத்தை கடக்க இது உதவுகிறது. யோக மரபில், சந்திர மாதமான கார்த்திகை, சாதனா பாதத்திலிருந்து கைவல்ய பாதத்திற்கு மாறுவதையும் குறிக்கிறது - சாதனத்தின் முந்தைய மாதங்களின் பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் விளக்குகள் ஏற்றுவது கொண்டாட்டத்தின் உணர்வைத் தாண்டியது. இது அறிவொளி, விழிப்புணர்வு மற்றும் பொய்யிலிருந்து உண்மைக்கு நகர்வதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் ஆண்டுதோறும் ஈஷாவில் மிகவும் அட்டகாசமாக கண் கவரும் ஆயிரக்கணக்கான விளக்குகளோடு கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த 2023 ஆம் ஆண்டின் கார்த்திகை தீபத் திருநாள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கார்த்திகை தீபத் திருநாளில் ஈஷாவின் மிக முக்கிய அம்சமாக அமைந்திருக்கும் தியானலிங்கம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஆதியோகி, லிங்கபைரவி, சூரிய குண்டம் மற்றும் நன்றி உள்ளிட்ட இடங்களில் ஈஷா மையத்தின் தன்னார்வலர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி ஆயிரக்கணக்கான அகல் விளக்கு தீபங்களை ஏற்றினர். கண் கவரும் விளக்குகளின் அணிவகுப்பில் ஒட்டுமொத்த ஈஷா மையமும் அற்புதமாக காட்சியளித்தது இந்த கார்த்திகை தீபத் திருநாளில் ஈஷா மைய கோலாகல கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அந்த அட்டகாசமான புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Tamil Nadu | On the occasion of the festival of Karthigai Deepam, the Isha Ashram in Coimbatore was illuminated by the light of thousands of Deepams.

The public and Isha volunteers celebrated the festival by lighting clay lamps at the Dhyanalinga and Linga Bhairavi temples, the… pic.twitter.com/O2BnBLOdqe

— ANI (@ANI) November 26, 2023

Leave a Comment